சென்னை :இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு, மத்திய அரசு 2025 ஆம் ஆண்டிற்கான நாட்டின் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. இந்தப் பட்டியல் பல்கலைக்கழகங்கள், பொறியியல், மருத்துவம், மேலாண்மை, மருந்தியல், சட்டம், கட்டிடக்கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உயர்கல்வி நிறுவனங்களை மதிப்பீடு செய்கிறது.
அதன்படி, நாட்டில் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது.சொல்லப்போனால், சென்னை ஐஐடி தொடர்ந்து 7வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது. தரவரிசையில் பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் 2வது இடம் பிடித்துள்ளது, மும்பை ஐஐடி 3வது இடம்,டெல்லி ஐஐடி 4வது இடம் பிடித்துள்ளது.
