தமிழகத்தில் இனிதான் பாஜக விஸ்வரூபம் எடுக்க உள்ளது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
unknown nodeஇது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில்,கஜா புயலால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். பிரதமர் இரங்கல் தெரிவிக்கவில்லை என திமுக தலைவர் கூறுவது தவறு.சிறுபான்மை மக்களை பாஜக மதிக்கிறது. ஆனால் பிரிவினை ஏற்படுத்தும் வகையில் பேசுவதில்லை.’சாடிஸ்ட்’ மோடி என கூறிவரும் ஸ்டாலின் இனிமேல் ’சாடஸ்ட்’ ஸ்டாலின் என அழைக்கப்படுவார். தமிழகத்தில் இனிதான் பாஜக விஸ்வரூபம் எடுக்க உள்ளது. நீங்களா, நாங்களா என பார்ப்போம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.