அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற சிசிடிவி காட்சிகள் அழிந்துவிட்டது!அப்போலோ தரப்பு பரபரப்பு தகவல்

45 நாட்களுக்கு மட்டுமே சிசிடிவி பதிவுகள் இருக்கும் என்பதால், பழைய பதிவுகள் கைவசம் இல்லை என்று அப்போலோ தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.

45 நாட்களுக்கு மட்டுமே சிசிடிவி பதிவுகள் இருக்கும் என்பதால், பழைய பதிவுகள் கைவசம் இல்லை என்று அப்போலோ தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவுடன் வேதா நிலையத்தில் தங்கி இருந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

unknown node

இந்நிலையில்  ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போதும் இருந்த சிசிடிவி காட்சிகளை ஒப்படைக்க அப்பல்லோ மருத்துவமனைக்கு கடந்த 6 ஆம் தேதி ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில் இன்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவமனை தரப்பு விளக்கம்  அளித்து வருகின்றது.அதில்  அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட போது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை என அப்பல்லோ தரப்பு வழக்கறிஞர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.45 நாட்களுக்கு மட்டுமே சிசிடிவி பதிவுகள் இருக்கும் என்பதால், பழைய பதிவுகள் கைவசம் இல்லை என்று கூறியுள்ளனர்.