"ராமதாஸ், அன்புமணியை வரச்சொல்லுங்க" – உயர்நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவு.!

அன்புமணி கூட்டும் பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில், அன்புமணி மற்றும் ராமதாஸ் இருவரும் இன்று மாலை 5.30 மணிக்கு தனது அறையில் ஆஜராக உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அழைப்பு விடுத்துள்ளார்.

Anubmani Ramadoss

சென்னை :அன்புமணி ராமதாஸ், நாளை (ஆகஸ்ட் 9) மாமல்லபுரத்தில் பாமகவின் பொதுக்குழு கூட்டத்தை நடத்த திட்டமிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராமதாஸ், இந்தக் கூட்டத்திற்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதன்படி, அன்புமணி கூட்டவிருக்கும் பா.ம.க. பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரி ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அன்புமணி கூட்டியுள்ள பாமக பொதுக்குழு கூட்டத்திற்கு (ஆகஸ்ட் 9, 2025 அன்று மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது) தடை கோரி ராமதாஸ் தரப்பு தாக்கல் செய்த மனு தொடர்பாக, இருவரும் நீதிபதியின் அறையில் இன்று மாலை 5:30 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

நீதிபதி, கட்சியின் நலன் கருதி இருவருடனும் தனியாக பேச விரும்புவதாக தெரிவித்துள்ளார். நீதிபதியின் அழைப்பை ஏற்று மாலை உயர்நீதிமன்றத்திற்கு வருவதாக அன்புமணி மற்றும் தகவல் தெரிவித்துள்னர்.