நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆயத்தங்களை செய்து வருகிறோம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார் .
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறுகையில் , வெவ்வேறு துறை சார்ந்த வல்லுநர்கள் பங்கேற்று தேர்தலை எதிர்கொள்வது பற்றி அறிவுரை வழங்கினார்கள் உள்ளாட்சி தேர்தலில் கவனம் செலுத்தவில்லை.பெரிய அளவில் வீச்சு இருக்க வேண்டும் என கருதுகிறோம்.
அதேபோல் தேர்தல் கூட்டணி பற்றி டிடிவி தினகரனுடன் நாங்கள் பேசவில்லை .என் கருத்துக்கு மாறுபட்ட கருத்தே இருக்கக்கூடாது என்பது ஜனநாயக நாட்டிற்கு ஏற்றதல்ல. யாராக இருந்தாலும் நீதிமன்றத்தையும், நீதியையும் மதித்துப் பேச வேண்டும் என்பது அடிப்படை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.