கோடநாடு வழக்கு ஜன.28ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

Kodanadu murder and robbery case adjourned till January 28.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை ஜனவரி 28-ம் தேதிக்கு ஒத்திவைத்த உதகை அமர்வு நீதிமன்றம்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை ஜனவரி 28-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. சயான், வாளையர் மனோஜ் உதகை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், இந்த வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதுர. 150 சாட்சியங்களிடம் விசாரணை நிறைவு பெற்றது என்றும் தேவைப்பட்டால் பல கைது நடவடிக்கை இருக்கும் எனவும் தெரிவித்தார்.

இதனிடையே, நேற்று கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் சசிகலாவின் அண்ணன் மகனும், இளவரசியின் மகனுமான விவேக் ஜெயராமனிடம் கோநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.