கோடநாடு வழக்கு – தீபுவிடம் ஐஜி விசாரணை!

Western Region IG Sudhakar interrogates Deepu in connection with Kodanad robbery and murder case.

கோடநாடு கொள்ளை, கொலை வழக்கு தொடர்பாக தீபுவிடம் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் விசாரணை.

கோடநாடு கொள்ளை, கொலை வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட நபரான தீபுவிடம் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தீபுவிடம் இரண்டு முறை விசாரணை தள்ளிப்போன நிலையில், இன்று விசாரணை நடைபெற்று வருகிறது.

மனோஜ், சயான், சதீசன், பிஜின்குட்டி ஆகியோரிடம் ஏற்கனவே  காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி ஆகியோரிடம் தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தி உள்ளனர். முந்தைய விசாரணையின் போது, அளித்த தகவல்கள், தற்போதைய மறு விசாரணை தகவல்களை கொண்டு காவல்துறை அடுத்தகட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது.