மு.க.முத்து மறைவு – மநீம தலைவர் கமல்ஹாசன் இரங்கல்!

கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து மறைவிற்கு மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

MK Muthu -Kamal Haasan

சென்னை : மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகனும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரருமான மு.க.முத்து மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், தற்போது, ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் தனது இரங்கல் செய்தியில், ”கலைஞரின் புதல்வரும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சகோதரருமான மு.க.முத்து அவர்கள் மறைந்துவிட்டார் என்ற செய்தி பெரும் துயரைத் தருகிறது.

அவருக்கு என் இரங்கல்கள். அவர்தம் குடும்பத்தாருக்கு என் நெஞ்சார்ந்த ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்