சென்னை :தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 30, 2025) ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு ஒரு வார பயணத்தை மேற்கொண்டார். இன்று காலை 9 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து ஜெர்மனி புறப்பட்ட அவருக்கு அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் வழியனுப்பி வாழ்த்து தெரிவித்தனர்.
புறப்படும் முன் விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்தித்து பேசுகையில், ”ஒருவார பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறேன். திராவிட மாடல் ஆட்சியில் இதுவரை ரூ.10.62 லட்சம் கோடியில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 929 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இதில் பெரும்பாலான ஒப்பந்தங்கள் முதலீடாக மாறி பணிகள் தொடங்கி விட்டன. இதற்கு ஒன்றிய அரசு வெளியிடும் புள்ளிவிபரங்களே சாட்சி. புதிய கட்சிகள் திமுக கூட்டணிக்கு வருகிறதோ இல்லையோ, புதிய வாக்காளர்கள் வருகின்றன. நான் அதிகம் பேசமாட்டேன், பேச்சை குறைத்து செயலில் திறமையை காட்டுவதுதான் எனது பாணி என்று கூறியுள்ளார்.
இவ்வாறு, தவெக மாநாட்டில் ‘2026ல் திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேதான் போட்டி’ என தவெக தலைவர் விஜயின் பேச்சுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
