காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்ட நமச்சிவாயம் பாஜகவில் இணைந்தார்.!

Former minister Namachchivayam joined the party in the presence of BJP national general secretary Arun Singh in Delhi.

டெல்லியில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் அக்கட்சியில் இணைந்தார்.

கடந்த 25-ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் நீக்கம் செய்யப்படுகிறார் என்று புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியம் அறிவித்திருந்தார். கட்சிக்கு துரோகம் இழைத்ததால், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

கட்சியிலிருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து நமச்சிவாயம், தனது வில்லியனுர் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை புதுச்சேரி சபாநாயகரிடம் அளித்திருந்தார். நமச்சிவாயத்திற்கு ஆதரவாக ஊசுடு தொகுதி எம்எல்ஏவும் தீப்பாஞ்சானும் ராஜினாமா செய்திருந்தார்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் முன்னாள் எம்எல்ஏ தீப்பாஞ்சானும் பாஜகவில் இணைந்தனர். டெல்லியில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் முன்னிலையில் இருவரும் கட்சியில் இணைந்தனர். நமச்சிவாயம் சில நாட்களுக்கு முன்பு தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.