சென்னை : 2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடங்கள் இருக்கும் நிலையில், அதற்கான தேர்தல் பணிகளில் ஆளும் திமுக கட்சி தற்போதே தங்கள் வேலைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். முன்னதாக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஒன்றை ஆரம்பித்து அதன் மூலம் தேர்தல் பணிகளை கவனித்து வருகின்றனர். திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் கே.என்.நேரு, ஏ.வ.வேலு, தங்கம் தென்னரசு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். முன்னதாக இந்த தேர்தல் […]
சென்னை : ஜூன் 9ஆம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் 2 நாட்களில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தரப்பில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. குரூப் 4 பிரிவில் 8,932 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்காக, சுமார் 15.8 லட்சம் பேர் இத்தேர்வை எழுதினர். முதன்முறையாக தேர்வு நடைபெற்று 3 மாதங்களில் முடிவுகள் வெளியிடப்படவுள்ளன. முடிவுகள் வெளியானதும், TNPSC ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் […]
சென்னை : திரைத்துறையில் உச்சத்தில் இருந்த நடிகர் விஜய், அடுத்தடுத்த படங்களில் எவ்வளவு அதிகமாக ஊதியம் கேட்டாலும் தயாரிப்பாளர்கள் கொடுக்க தயாராக இருந்த சூழலிலும், அதனை முழுதாக விடுத்து இனி நடிப்பு வேண்டாம்., முழுநேர அரசியல் மட்டுமே என களம் கண்டிருக்கிறார் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய். மேடை அரசியல் பேச்சுக்கள் பல கண்டாலும் , நேரடி கள அரசியலில் முதற்படி, முதல் மாநாடு , லட்சக்கணக்கான தொண்டர்கள் வருகை இதனை வெற்றிகரமாக செயல்படுத்தி, தான் […]
விழுப்புரம் : விக்கிரவாண்டியில் நேற்று நடைபெற்ற தவெகவின் முதல் அரசியல் மாநாடு சில குறைபாடுகள் இருந்த போதிலும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. மாநாட்டில் விஜய்யின் பேச்சு பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது. அவரின் பேச்சு எளிமையாகவும், இளைஞர்களுக்கு புரியும் மொழியிலும் இருந்தது. தவெக கொள்கை விளக்க மாநாட்டில் விஜய்யின் பேச்சு மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. குறிப்பாக, கடவுள் மறுப்பு தவிர்த்து பெரியாரின் மற்ற கொள்கைகளை ஏற்பதாக அறிவித்திருப்பது மக்களின் மனநிலையை அவர் அறிந்திருப்பதைக் காட்டுகிறது. இந்நிலையில், அரசியல் […]
சென்னை : நேற்று விக்கிரவாண்டியில் தவெக முதல் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் 13 லட்சம் பேர் கலந்து கொண்டனர் என தகவல் வெளியானது. எதிர்பார்த்ததை விட அதிகளவு கூட்டம் கூடியதால் மாநாட்டை முன்கூட்டியே தொடங்கி நடத்தினர். இந்த மாநாட்டில் காலை முதலே தொண்டர்கள் காத்திருந்த்தால் கடும் வெயில் தாக்கம் காரணமாக சிலர் அங்கங்கே மயங்கி விழும் நிலையும் ஏற்பட்டது. சென்னை கீழ்பாக்கம் பகுதியை சேர்ந்த சார்லஸ் என்பவர் மாநாட்டு திடலில் மயங்கி விழுந்தார். அவருக்கு முதலுதவி […]
சென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக இன்று முதல் 30ம் தேதி ஆகிய மூன்று நாட்களில் சென்னையிலிருந்து தினசரி இயக்கப்படுகின்ற 2,092 பேருந்துகுளுடன், 4,900 சிறப்பு பேருந்துகள் என மூன்று நாட்களும் சேர்த்து 11.176 பேருந்துகள் இயக்கப்படும். பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 2,910 சிறப்பு பேருந்துகளும் ஆக ஒட்டு மொத்தமாக 14.086 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இன்று அதன்படி, சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக […]
சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு வெற்றிகரமாக நிறைவுபெற்றது. இந்த மாநாட்டில் சுமார் 13 லட்சம் பேர் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று அதிகாலை முதலே தொண்டர்கள் வருகை அதிகமாகி நண்பகலில் கூட்டம் இன்னும் அதிகரிக்கவே, குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே மாநாடு தொடங்கியது. கிராமிய கலைகளுடன் தவெக முதல் மாநில மாநாடு தொடங்கியது. முதன் முதலாக பரை இசையுடன் மாநாடு நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. விஜயின் வருகையை எதிர்நோக்கி […]
சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற்று முடிந்தது. சுமார் 12 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். தனது கட்சியின் கொள்கைகள், செயல்திட்டடங்கள் , அரசியல் கருத்துக்கள் என முதல் அரசியல் மாநாட்டை நினைத்தபடி செயல்படுத்தியுள்ளார் விஜய். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என தொடங்கி, பிளவுவாத அரசியல், ஊழல்வாத அரசியல் தனது எதிரிகள் என்றும், திராவிட மாடல் அரசு என மக்களை […]
விழுப்புரம் : த.வெ.க கட்சியானது 5 கொள்கை தலைவர்களாக பெரியார், காமராஜர், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரின் வழியில் அரசியல் அமைக்க உள்ளதாக கட்சித் தலைவர் விஜய் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “போராட்ட களத்தில் இறங்கி போராடிய ராணி வேலுநாச்சியார், பகுத்தறிவு தந்தை பெரியார, பச்சை தமிழன் காமராஜர், சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர், கர்ப்பவதியாக இருந்தும் போராடிய பெண் தெய்வம் அஞ்சலை அம்மாள் என்று கொள்கை தலைவர்களின் வழியில் அரசியல் அமைக்க உள்ளதாக […]
மதுரை : மாநாட்டில் விஜய்யின் பேச்சு ஆவேசமாகவும் உணர்ச்சிகரமாகவும் இருந்தது. த.வெ.க கட்சியானது 5 கொள்கை தலைவர்கள் வழியில் அரசியல் அமைக்க உள்ளதாக கட்சித் தலைவர் விஜய் அறிவித்திருக்கிறார். இதனிடையே, கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மதுரை காந்திபுரம் பகுதி மக்களுக்கு நிவாரண உதவி வழங்கினார். அப்பொழுது, தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் அக்கட்சியின் கொள்கைகளை இன்று விஜய் அறிவித்துள்ள நிலையில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “திராவிடமும், தமிழ்த்தேசியமும் இரு கண்கள் என்கிறார் […]
சென்னை : விஜயின் தலைமையில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் விஜய் பல்வேறு அரசியல் கருத்துக்களை வெளிப்படையாக பேசி தனது முதல் அரசியல் மாநாட்டு உரையை நிகழ்த்தியுள்ளார். அதில். பிறப்பொக்கும், எல்லா உயிர்க்கும் என அனைவரும் சமம் என்றும், கூட்டணியில் ஆட்சியில் பங்கு, சாதி மத வர்க்க பிரிவினைவாதத்திற்கு எதிர்ப்பு என பல்வேறு கருத்துக்களை பேசியிருந்தார். அவர் பேசிய கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த […]
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் இன்று பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட த.வெ.க தலைவர் விஜய் ” மக்கள் விரோத ஆட்சிய திராவிட மாடல் அரசுனு சொல்லிட்டு மக்களை ஏமாத்துறீங்க. எங்களுக்கு எந்த சாயமும் நீங்க பூச வேண்டாம். நாங்க ஏற்கனவே எங்களுக்கு ஒரு கலர் கொடுத்திருக்கோம். ஏ.பி, சி.டி டீம்னு எங்க மேல அவதூறு பரப்ப முடியாது. திராவிட மாடல்னு சொல்லி., தந்தை பெரியார், அறிஞர் […]
விழுப்புரம் : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடானது இன்று வெற்றிகரமாக விக்கிரவாண்டி, வி.சாலையில் நடைபெற்றது. இந்த முதல் மாநில மாநாடு அறிவிப்பு வெளியானது முதல், விஜய் அரசியலில் பங்கேற்கப் போகும் முதல் விழா என்பதால் அவர் என்ன பேசுவார்? அவரது கட்சிக் கொள்கைகள் என்னென்ன? என்பது தான் ஒட்டுமொத்த தமிழகத்தின் பேச்சாகவும் இருந்து வந்தது. அதே போல, கட்சித் தொடங்கிய நாள் முதல், அவர் யாருடன் கூட்டணி அமைத்து தேர்தல் களம் காண்பார்? என்ற கேள்வியும் […]
விழுப்புரம் : த.வெ.க மாநாடு இன்று நடைபெறுவதை முன்னிட்டு இந்த அளவுக்கு கூட்டம் வருமா? என பலரையும் வியக்க வைக்கும் வண்ணம் தவெக தொண்டர்கள் கூட்டம் இன்றுஅலைமோதியது. இன்று அதிகாலை முதலே பலரும் கூட்டம் கூட்டமாக மாநாடு நடைபெறும் இடத்திற்கு வந்தனர். காலை 9 மணி நிலவரப்படி 1.50 லட்சம் மக்கள் கூடியதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனைத்தொடர்ந்து மாநாடு நடைபெறும் நேரம் நெருங்க நெருங்கமாநாட்டிற்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகமாகிக்கொண்டிருந்தது. குறிப்பாக, மாநாடு தொடங்கியவுடன் காவலர்கள் கொடுத்த […]
விழுப்புரம் : ‘தமிழக வெற்றிக் கழகத்தின்’ கட்சித் தொடங்கி அதன் கொடி அறிவிக்கப்பட்டது முதல், அதற்கான விளக்கத்தை மக்கள், தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் என பலரும் இணையத்தில் அவர்களது கருத்தை தெரிவித்து வந்தனர். மேலும், அதற்கான விளக்கத்தை முதல் மாநாட்டில் விளக்கிக் கூறுவேன் என சமீபத்தில் நடைபெற்ற தவெக கல்விப் பரிசு வழங்கும் விழாவில் அறிவித்திருந்தார். அதன்படி, இன்று தவெகவின் முதல் மாநாடானது நடைபெற்றது. இதில், தவெக தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது, கொடிக்கான விளக்கத்தை மேடையில் […]
விழுப்புரம் : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் இன்று பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் தவெக கட்சித் தலைவர் விஜய் மிக ஆவேசமாக தனது முதல் அரசியல் உரையை பேசி முடித்தார். அப்போது மதவாத பிளவுவாத அரசு பாசிச அரசு என பாஜகவையும், முகமூடி அரசு என ஆளும் திமுக அரசையும் மறைமுகமாகவும், நேரடியாகவும் கடுமையாக விமர்சனம் செய்தார். விஜய் பேசுகையில், “மதவாத அரசியல் பேசுறவங்கல நாம கண்டுபிடிச்சிறலாம். ஆனால்., ஊழல் […]
விழுப்புரம் : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடானது விழுப்புரத்தில் உள்ள வி.சாலையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள், செயல்திறன்களை மேடையில் அறிவித்தனர். அதன்பின், இறுதியாக தவெக தலைவர் விஜய் உரையாற்றினார். அதில், தான் அரசியலுக்கு வந்த காரணம், சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த காரணம் என அனைத்தையும் விளக்கி கூறினார். அதன் பிறகு, வீடியோவாக தவெக கட்சியின் பெயர் விளக்கத்தை கூறியிருந்தார் விஜய். தவெக பெயர் காரணம் : தமிழக […]
விழுப்புரம் : விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் ஆரவாரத்துடன் நடைபெற்று வரும் தவெக மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய், பாம்பு கதையடன் தனது உரையை தொடங்கியதோடு, கொக்கை விளக்கத்தையும் அளித்தார். தொடர்ந்து பேசிய அவர், தன் மீதான விமர்சனம், ட்ரோல், தமிழகத்தில் நடக்கின்ற அரசியல் பற்றியும், திராவிடத்தை பற்றியும் பேசியிருக்கிறார். அத்துடன் தான் அரசியலுக்கு வந்தது ஏன்? என்கிற விளக்கத்தையும் அளித்திருக்கிறார். அரசியலுக்கு வந்தது ஏன்? “இந்த அரசியல் நமக்கு எதற்கு…? நடித்தோமா நாலு காசு பார்த்தோமா என்றுதான் ஆரம்பத்தில் […]
விழுப்புரம் : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பிரமாண்ட மாநாடு தமிழ்நாட்டையே திரும்பி பார்க்கும் அளவுக்கு விக்ரவாண்டி வி.சாலையில் படு பிரமாண்டமாக நடைபெற்றது, மொத்தமாக, மாநாட்டிற்கு சுமார் 13 லட்சத்தி 80 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், மாநாட்டில் கலந்துகொண்ட கட்சித் தலைவர் விஜய் தன்னுடைய தொண்டர்களுக்குக் குட்டி கதை முதல் கட்சியின் கொள்கைகள் என பல விஷயங்களைப் பற்றியும் பேசினார். அதில் மிகவும் முக்கியமாக தன்னுடைய தங்கை இறப்பு தனக்கு எவ்வளவு பாதித்தது? என்பது […]
விழுப்புரம் : தவெக மாநாட்டு நிகழ்வுகள் ஆரவாரத்துடன் நடைபெற்று வருகிறது. கட்சியின் கொள்கை பிரகடனம் அறிவிக்கப்பட்ட நிலையில், இப்போது தலைவர் விஜய்யை உரையாற்ற மேடைக்கு அழைக்கப்பட்டார். ஆனால், நேரே அவர் மைக் முன் செல்லாமல், மேடைக்கு கீழே முன்வரிசையில் அமர்ந்திருந்த பெற்றோர் சந்திரசேகர் – ஷோபாவிடம் சென்று கட்டி அணைத்து ஆசிபெற்றார். பின் மேடைக்கு திரும்பிய அவர் அதிரடியாக பேசத் தொடங்கியுள்ளார். மேடையில் பேச தொடங்கிய விஜய், “பாம்பு தான் அரசியல், பாம்பாக இருந்தாலும் பயமில்லை என்பதுதான் […]