சென்னை : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே இன்று காலை நடந்த மிகுந்த பரிதாபமான விபத்தில், பள்ளி வேன் ஒன்று ரயிலுடன் மோதி மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து முதற்கட்ட விசாரணையில், பள்ளி வேன் ரயில்வே கேட் இல்லாத பாதையில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக […]
சென்னை : போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. இவர்கள் கடந்த ஜூன் 23 மற்றும் 26 ஆம் தேதிகளில் சென்னை நுங்கம்பாக்கம் காவல்துறையினரால் கொகைன் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறப்பு நீதிமன்றத்தில் இவர்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இருவரும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதன்படி, இன்று (ஜூலை 8) நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு […]
கடலூர் : கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8) காலை 7:40 மணியளவில் தனியார் பள்ளி வேன் ஒன்று ரயில்வே கேட்டை (லெவல் கிராசிங் எண் 170, இன்டர்லாக் இல்லாத கேட்) கடக்க முயன்றபோது, விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில் (எண் 56813) மோதியதால் கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வேன் சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு முற்றிலும் சேதமடைந்தது. இந்த விபத்து அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது இந்த விபத்தில் […]
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் பாமக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மூத்த மகள் காந்திமதி மற்றும் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். ஆனால், கூட்ட அறிவிப்புகளில் அன்புமணி ராமதாஸ் பெயரும், புகைப்படமும் இடம்பெறவில்லை. கடந்த ஐந்தாம் தேதி தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிர்வாக குழு கூட்டம் நடைபெற்ற முடிந்த நிலையில் இன்று பாமக மாநில செயற்குழு கூட்டம் தொடங்கியது. பாமக மாநில செயற்குழு கூட்டத்தில், தமிழகம் முழுவதிலிருந்தும் சுமார் […]
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே, ஆச்சாரியா பள்ளியின் வேன் மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. வேன் ரயில்வே கேட்டைக் கடக்க முயன்றபோது, விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில் […]
கடலூர்: மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை கிருஷ்ணசாமி பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில் மோதிய கோர விபத்தில், தொண்டமாநத்தத்தைச் சேர்ந்த மாணவி சாருமதி (16, 11ஆம் வகுப்பு), அவரது தம்பி செழியன் (15, 10ஆம் வகுப்பு) மற்றும் ஆறாம் வகுப்பு மாணவன் நிமலேஷ் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் சில மாணவர்கள் படுகாயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடந்தபோது, ரயில்வே கேட் திறந்தநிலையில் […]
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில் மோதிய விபத்தில், தொண்டமாநத்தத்தைச் சேர்ந்த மாணவி சாருமதி (16, 11ஆம் வகுப்பு) மற்றும் அவரது தம்பி செழியன் (15, 10ஆம் வகுப்பு) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த கோர விபத்தில் வேன் முற்றிலும் நொறுங்கியதில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து, செம்மங்குப்பத்தில் உள்ள […]
கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025) காலை ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்தனர், மேலும் சில மாணவர்கள் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. அதே போல, இந்த விபத்தின்போது, ரயில்வே கேட் அருகே நின்றிருந்த அண்ணாதுரை (45) என்பவர் மீது மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்ததில், அவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த இரட்டை […]
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே இன்று (ஜூலை 8, 2025) காலை ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 2 மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலையிலே இந்த செய்தி மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், இப்போது இந்த விபத்தின்போது, ரயில்வே கேட் அருகே நின்றிருந்த அண்ணாதுரை (45) என்பவர் மீது மின்கம்பி அறுந்து விழுந்ததால், மின்சாரம் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே […]
சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜூலை 9, 2025) ஆட்டோ மற்றும் பேருந்து சேவைகள் முடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வு உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. தொமுச (LPF), ஐஎன்டியுசி (INTUC), சிஐடியு (CITU) உள்ளிட்ட 13 முக்கிய தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்கின்றன. இதனால், பொது போக்குவரத்து சேவைகள் பெரிதும் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வேலைநிறுத்தத்தில் அரசு அலுவலர்கள், […]
சென்னை : நகரின் மக்கள் தொகை மற்றும் பிற முக்கிய விவரங்களைப் புதுப்பிக்கும் வகையில், இன்று முதல் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு பணிகளைத் தொடங்கியுள்ளது. இந்தக் கணக்கெடுப்பு, குறிப்பாக சைதாப்பேட்டை, திடீர் நகர், அடையாறு ஆற்றங்கரை உள்ளிட்ட பகுதிகளில் முதற்கட்டமாக நடைபெறவுள்ளது. குடியிருப்பாளர்கள் தங்கள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற முகவரி ஆவணங்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்த பயோமெட்ரிக் கணக்கெடுப்பு, மக்களின் கைரேகை, கருவிழி ஸ்கேன் மற்றும் […]
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது ரயில் மோதிய விபத்தில் ஒரு மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து இன்று (ஜூலை 8, 2025) காலை செம்மங்குப்பம் அருகேயுள்ள ஆளில்லா ரயில்வே கேட் பகுதியில் நடந்தது. பள்ளிவேன், ஆளில்லா கேட்டைக் கடக்க முயன்றபோது, வேகமாக வந்த ரயில் மோதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் பள்ளி வாகனம் முற்றிலும் நொறுங்கியதாகவும், இதில் பயணித்த மாணவர்களுக்கு கடுமையான […]
சென்னை : தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றான பாட்டாளி மக்கள் கட்சியில் (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தீவிரமடைந்து வருகிறது. இந்த உட்கட்சி மோதலின் விளைவாக, இருவரும் தனித்தனியாக கூட்டங்களை நடத்தி, கட்சியின் கட்டுப்பாட்டை தங்கள் வசம் வைத்திருக்க முயற்சிக்கின்றனர். இதன் ஒரு பகுதியாக, இன்று (ஜூலை 8, 2025) திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் பா.ம.க. செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டம் […]
மதுரை : மாநகராட்சியில் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் திமுகவில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியில் ஐந்து மண்டலங்களில் 100 வார்டுகள் உள்ளன, மற்றும் இந்த மண்டலங்களின் தலைவர்களாக வாசுகி, சரவண புவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ் சர்மா மற்றும் சுவிதா ஆகியோர் பதவி வகித்து வந்தனர். […]
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இருவரும் ஜூலை 8, 2025 அன்று தனித்தனியாக கூட்டங்களை நடத்த உள்ளனர். திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் பாமக செயற்குழுக் கூட்டமும், சென்னை சோழிங்கநல்லூரில் அன்புமணி தலைமையில் நிர்வாகக் குழு கூட்டமும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு கூட்டங்கள், கட்சிக்குள் நிலவும் அதிகாரப் போட்டியையும், கருத்து வேறுபாடுகளையும் மேலும் […]
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை 7, 2025 அன்று தனது மாநில அளவிலான பிரச்சாரத்தை “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற முழக்கத்துடன் தொடங்கினார். வன பத்ரகாளியம்மன் கோயிலில் வழிபாடு நடத்திய பின்னர், விவசாயிகள், நெசவாளர்கள், மற்றும் செங்கல் உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடிய அவர், திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். “இந்தக் கூட்டத்தைப் பார்த்து ஸ்டாலினுக்கு ஜுரம் வந்திருக்கும். நாளை அவர் மருத்துவரைச் […]
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அனுமதி மறுக்கப்பட்டதாகவும், பின்னர் வாக்குவாதத்திற்கு பிறகு வழிபட அனுமதிக்கப்பட்டதாகவும் புகார் தெரிவித்தார். இன்று (ஜூலை 7) – ஆம் தேதி அன்று நடைபெற்ற இந்த விழாவில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உடனடியாக அனுமதிக்கப்பட்டதாகவும், ஆனால் தனக்கு ஆரம்பத்தில் தடை விதிக்கப்பட்டதாகவும் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டினார். இந்த சம்பவம், இந்து சமய அறநிலையத்துறை […]
சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும் வைரலானது. இந்த செய்தி உண்மையா அல்லது வதந்தியாக பரவும் செய்தியா? என பலரும் குழப்பத்தில் இருந்தனர். இதனையடுத்து, இப்படி வெளியான செய்தி முற்றிலும் தவறானது என்று தமிழ்நாடு சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் திட்டவட்டமாக தெரிவித்தார். ஜூலை 7, 2025 அன்று சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், நாளிதழ் ஒன்றில் வெளியான “போதிய ஊழியர்கள் இல்லாததால் 501 […]
சென்னை: தமிழ் திரைப்பட நடிகர்களான ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பு சென்னை நீதிமன்றத்தில் கடந்த ஜூலை 3-ஆம் தேதி அன்று தள்ளிவைக்கப்பட்டது. இந்த வழக்கு, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் மே 22, 2025 அன்று பெருமளவு போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்து தொடங்கியது. ஸ்ரீகாந்த் ஜூன் 23 அன்றும், கிருஷ்ணா ஜூன் 26 அன்று கைது செய்யப்பட்டனர். விசாரணையில், முன்னாள் அதிமுக பிரமுகர் […]