மதுரை : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், இன்று (ஜூலை 14) ஆம் தேதி காலை 5:25 முதல் 6:10 மணிக்குள் குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 7 நிலைகளைக் கொண்ட 125 அடி உயரமுள்ள ராஜகோபுரத்தில், வேத மந்திரங்கள் முழங்க, லட்சக்கணக்கான பக்தர்களின் “அரோகரா” கோஷத்துடன் புனித நீர் கலசங்களில் ஊற்றப்பட்டது. ராஜகோபுரத்திற்கு தீபாராதனை காட்டப்பட்டு, கோயிலின் புனரமைப்பு பணிகள் உச்சகட்டமாக இந்த விழாவில் நிறைவடைந்தன. குடமுழுக்கு விழாவைத் தொடர்ந்து, இன்று காலை 7:30 […]
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு தீ விபத்துக்குள்ளானது. மணலியில் இருந்து ஜோலார்பேட்டைக்கு பெட்ரோலிய பொருட்களை (டீசல்) ஏற்றிச் சென்ற இந்த ரயிலில், திருவள்ளூர்-ஏகாட்டூர் ரயில் நிலையம் அருகே தீப்பிடித்தது. 52 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலில் 4 வேகன்கள் எரிந்து சேதமடைந்தது. இந்த நிலையில், சென்னையில் இருந்து செல்லும் 12 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் வசதிக்காக திருவள்ளூரிலிருந்து […]
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், ஒடிசா கடற்கரை பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி […]
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சமூக ஊடகங்களில் வெளியான தகவல்களின்படி, சான் ரேச்சல் கருப்பழகி பிரிவில் உலக அழகி பட்டம் வென்றவர். அவர் பேஷன் ஷோக்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். இதில், ஏற்பட்ட நஷ்டம் காரணமாக உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது. […]
சென்னை : திருவள்ளூர் அருகே ஏகாட்டூரில் இன்று அதிகாலை 5:20 மணியளவில் சென்னை துறைமுகத்தில் இருந்து ஜோலார்பேட்டைக்கு எரிபொருள் (டீசல்) ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரயிலின் மூன்று வேகன்கள் தடம் புரண்டு எரிபொருள் கசிவு ஏற்பட்டதால் தீ பற்றியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தீயணைப்பு வீரர்கள் 6 முதல் 7 மணி நேரம் போராடி, நுரை வகை தீயணைப்பு மூலம் தீயை முழுமையாக அணைத்தனர். 85% தீ […]
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள்15ம் தேதி நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வருகின்ற 16ம் தேதி மற்றும் 17ம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, நீலகிரி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் சென்னை சிவானந்தா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கூட்ட நெரிசலாலும், வெயிலின் தாக்கத்தாலும் பல தொண்டர்கள், குறிப்பாக பெண் தொண்டர்கள், மயக்கமடைந்தனர். இந்த ஆர்ப்பாட்டம், சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித்குமார் என்ற இளைஞரின் காவல்நிலைய மரணத்திற்கு நீதி கோரி நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்ட மேடையில் பேசிய தவெக தலைவர் விஜய், “திமுக மாடல் சர்க்கார், இப்போது சாரிம்மா மாடல் சர்க்காராக மாறிவிட்டது. எல்லாத்துக்கும் நீதிமன்றம் தலையிட்டு கேள்வி கேட்கணும்னா, பின் […]
சென்னை : திருவள்ளூர் அருகே டீசல் டேங்கர் ரயிலில் ஏற்பட்ட தீ 5 மணி நேரமாக எரிந்து வரும் நிலையில், 70% தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என்று தீயணைப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளனர். 27,000 லிட்டர் டீசலுடன் 5 மணி நேரத்திற்கும் மேலாக எரியும் ரயில் டேங்கர்கள் தீயை அணைக்கும் பணியில் 50 பேரிடர் மீட்புப் படை வீரர்கள் அரக்கோணத்தில் இருந்து விரைந்துள்ளனர். 52 பெட்டிகள் கொண்ட ரயிலில் 18 டேங்கர்கள் தீயில் எரிந்து நாசமாகியது. மதியம் […]
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த 24 குடும்பத்தினருக்கு நீதி கேட்டு சென்னையில் தவெக #TNDemands Justice என்ற பேரணி நடத்தப்பட்டது. மக்கள் போராட்டத்தில் முதல் முறையாக விஜய் களமிறங்குவதால் ஆயிரக்கணக்கான தவெகவினர் குவிந்தனர். ஆர்ப்பாட்டம் தொடங்கிய நிலையில், ஆர்ப்பாட்ட மேடையில் கருப்பு சட்டை அணிந்து விஜய் மற்றும் காவல் நிலையங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் மேடை ஏறினார். குறிப்பாக, விஜய் ‘Sorry வேண்டாம் நீதி வேண்டும்’ என்ற வாசகம் பொறித்த பதாகையை ஏந்தி […]
சென்னை : அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை சிவானந்தா சாலையில் தவெக தலைவர் விஜய் தலைமையில் இன்னும் சற்றுநேரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ள ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தரும் தவெகவினரை போலீசார் தடுத்து நிறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தப் போராட்டம் அஜித்குமாரின் மரணத்திற்கு நீதி கோருவதற்காகவும், வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழுவிற்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தியும் தவெக ஆர்ப்பாட்டத்திற்கு சென்னையில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் ‘திரு. மு.க. ஸ்டாலின் தலைமையிலான […]
சென்னை : திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே இன்று (ஜூலை 13) அதிகாலை 5:20 மணியளவில் சென்னை மணலியில் இருந்து ஜோலார்பேட்டைக்கு பெட்ரோலிய பொருட்கள் (கச்சா எண்ணெய்) ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. ரயில் பெட்டிகள் தடம் புரண்டதால் எரிபொருள் கசிந்து தீ பரவியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தீ மளமளவென பரவி, எட்டு பெட்டிகளுக்கு பரவியதால், திருவள்ளூர் ஏகாட்டூர் பகுதியைச் சுற்றி 10 கி.மீ. தொலைவுக்கு கரும்புகை பரவியது, இதனால் அருகே […]
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக வெடித்துள்ளது. இந்த சூழலில், திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் உள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் இல்லத்தில் ஒட்டுக் கேட்பு கருவி பொருத்தப்பட்டிருந்ததாக அவர் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது மேலும் பேசுபொருளாக வெடித்துள்ளது. இது தொடர்பாக விருத்தாச்சலத்தில் ஜூலை 11 அன்று செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், “என் வீட்டில், நான் உட்காரும் நாற்காலிக்கு அருகே லண்டனில் இருந்து […]
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போது பயன்படுத்தப்படும் நேரடி முறையிலான இருக்கை அமைப்பு, மாணவர்களின் கவனத்தை சிதறடிப்பதாகவும், ‘ப’ வடிவ வகுப்பறைகள் மாணவர்களின் கவனத்தை ஆசிரியர் மற்றும் கற்றல் செயல்பாடுகளின் மீது திருப்புவதாகவும் பள்ளிக் கல்வித்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டதில் குறிப்பிட்டுள்ளது. இந்த மாற்றத்தின் மூலம், மாணவர்களின் கற்றல் திறன் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் […]
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை திருட்டு வழக்கில் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து, த.வெ.க கடந்த ஜூலை 6 அன்று சென்னை சிவானந்தா சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி சென்னை காவல் துறையிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனு இரண்டு முறை நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, த.வெ.க சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, சென்னை […]
சென்னை : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஏற்கனவே, கடந்த ஜூலை 2-ஆம் தேதி சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் “திமுக அரசுக்கு எதிராக எந்தவொரு கட்டத்திலும், எந்தப் பிரச்சனையிலும் நாங்கள் ஒரு வார்த்தை கூட விமர்சனம் செய்ததில்லை. இனியும் செய்ய மாட்டோம். கலைஞர் (மு.கருணாநிதி) இருந்தவரை அவருக்கு பக்கபலமாக இருந்தேன். அவருக்கு நான் அளித்த வாக்குறுதிப்படி, முதல்வர் ஸ்டாலினுக்கும் உறுதுணையாக இருப்பேன். இந்த வாக்குறுதியில் உறுதியாக இருக்கிறேன். […]
கேரளா : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கேரளாவில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருகை தந்திருக்கிறார். நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கு முன்பு அவர் திருவனந்தபுரத்தில் உள்ள புதரிக்கண்டம் மைதானத்தில் பூத் அளவிலான கட்சித் தொண்டர்களின் கூட்டத்தில் கலந்துகொண்டு தொண்டர்களுக்கு மத்தியில் உரையாற்றினார். அப்போது அமித் ஷா, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளின் ஆட்சியில் கேரள மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை சுட்டிக்காட்டி, இந்தக் கட்சிகளின் ஆட்சி மக்களுக்கு பயனளிக்கவில்லை என விமர்சித்தார். கேரளாவில் ஊழல், மோசமான நிர்வாகம், மற்றும் […]
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 17-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், 16-07-2025 மற்றும் 17-07-2025 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதைப்போல, […]
கடலூர் : மாவட்டத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய ரயில் விபத்தில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவின் அலட்சியமே முக்கிய காரணமாக அமைந்துள்ளது. ரயில்வே கேட்டை மூடாமல், மூடிவிட்டதாக ஸ்டேஷன் மாஸ்டருக்கு தவறான தகவல் அளித்தது இந்த பயங்கர விபத்துக்கு வழிவகுத்தது. இந்த சம்பவம், ரயில்வே பாதுகாப்பு நடவடிக்கைகளில் உள்ள குறைபாடுகளை வெளிச்சமிட்டு, பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விபத்து நடந்த நேரத்தில், பங்கஜ் சர்மா கேட்டை மூடாமல், அதை முறையாக மூடிவிட்டதாக ஸ்டேஷன் மாஸ்டருக்கு தெரிவித்தார். இதனால், […]
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியில் நடந்த பரப்புரையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ”தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை எந்த விதத்திலும் குறையாது என மத்திய அரசு தெளிவுபடுத்திவிட்டது. தொகுதி மறுவரையறை பற்றி எந்த அறிவிப்பும் வரவில்லை, அதற்குள் எப்படி கருத்து சொல்ல முடியும்” என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், ”கல்வி என்றால் என் உயிர் மூச்சு, தமிழ்நாட்டில் […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ் கட்சி (BSP) சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை, இடைக்கால மனுவைத் திரும்பப் பெற்றுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் தேர்தல் சின்னம் யானை. இதன் காரணமாக இந்தக் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியில் யானை படத்தைப் பயன்படுத்துவதை எதிர்த்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தது. தவெகவின் கொடியில் உள்ள யானை, […]