சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல் தலைவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்களை கேள்விகளை எழுப்பினார்கள். அந்த கேள்விக்கு பதில் அளித்த சீமான் ” அவருடைய கட்சி என்றால் அவர் தானே வேட்பாளராக இருப்பார். அவர்கள் சரியாக தான் சொல்கிறார்கள் மும்முனை போட்டி என்று. ஏனென்றால், எங்களுடைய கொள்கைகளுக்கு அவர்களுடைய கொள்கைக்கும் எதாவது சம்பந்தம் இருக்கிறதா? […]
சென்னை : பேட்டிங் அதிரடி சூறாவளி, விக்கெட் கீப்பிங்கில் மின்னல் வேகம், கேப்டன்ஷிப்பின் உச்சம் தொட்ட தமிழகத்தின் தத்துப்பிள்ளையான ‘கேப்டன் கூல்’ தோனிக்கு இன்று பிறந்தநாள். அந்த வகையில், தனது நண்பர்களுடன் சேர்ந்து MS தோனி கேக் வெட்டிக் கொண்டாடிய வீடியோ வைரலாகிறது. அந்த வீடியோவில், தோனி ஸ்லீவ்லெஸ் டி-சர்ட் அணிந்து நண்பர்களுடன் கேக் துண்டுகளைப் பகிர்ந்து கொண்டு சிரித்துக் கொண்டிருந்தார், இதனை கண்டு ரசிகர்கள் அவரது கியூட் மொமண்ட்டுக்கு ஹார்டின்களை பறக்கவிட்டு வருகின்றனர். MS Dhoni […]
கோவை : 2026 தேர்தலுக்காக இன்னும் சற்று நேரத்தில் இபிஎஸ் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். இன்று (ஜூலை 7, 2025) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை கோவை மாவட்டத்தின் மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் தொடங்குகிறார். இந்த சுற்றுப்பயணத்தில், அவர் தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நேரில் சென்று மக்களைச் சந்திக்க உள்ளார். முதற்கட்டமாக, இன்று மேட்டுப்பாளையம் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதிகளிலும், ஜூலை […]
சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் துறையின்கீழ் செயல்பட்டு வரும் 727 பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் 41,194 மாணவ மாணவிகளும், 455 மிகப் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் 26,653 மாணவ மாணவிகளும், 157 சீர்மரபினர் விடுதிகளில் 9,372 மாணவ மாணவிகளும், 20 […]
சென்னை : தமிழகத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07, 2025) தொடங்குகிறது. இந்தப் பணியின் கீழ், சுமார் 1 லட்சம் தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று விண்ணப்பங்கள் மற்றும் தகவல் கையேடுகள் வழங்கப்படும். இந்தப் பணி மூன்று மாதங்களுக்கு தொடர்ச்சியாக நடைபெறும். இத்திட்டத்தின் முதல் முகாம் ஜூலை 15, 2025 அன்று கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்படும். […]
தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விண்ணை முட்டும் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்திற்கு நடுவே திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழா 12 ஆண்டுகளுக்கு பிறகு வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. கடந்த 1ம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடந்து முடிந்த நிலையில், இன்று கும்பாபிஷேகம் நிகழ்வு நடைபெற்று வருகிறது. விழாவிற்காக 8,000 சதுர அடியில் 76 ஓம குண்டங்களுடன் பிரமாண்ட யாகசாலை அமைக்கப்பட்டு, அதிகாலை 4 மணிக்கு […]
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு, தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், அஜித்துடன் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரது சகோதரர் நவீன்குமார், காவலர்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஜூலை 6, 2025 அன்று, கால் பாதங்களில் ஏற்பட்ட கடுமையான வலி காரணமாக நவீன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் […]
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக, ஜூலை 8, 2025 அன்று சென்னையில் நடைபெற உள்ள பயிற்சிப் பட்டறை மற்றும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கு கட்சித் தலைமை அழைப்பு விடுத்துள்ளது. இந்தக் கூட்டத்தில், ஒவ்வொரு மாவட்ட செயலாளரும் தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்த இரு நிர்வாகிகளை மடிக்கணினியுடன் அழைத்து வர வேண்டும் என்று கட்சி […]
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் (விமான எண் SG-3281) திடீர் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இந்த விமானத்தில் 65 பயணிகள் உட்பட 70 பேர் பயணிக்க இருந்தனர். விமானி, கோளாறை உரிய நேரத்தில் கண்டறிந்து, புறப்படுவதற்கு முன்பாக விமானத்தை ஓடுபாதையில் அவசரமாக நிறுத்தினார். இந்த சம்பவம் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது, ஆனால் உடனடி நடவடிக்கையால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.விமானத்தில் ஏற்பட்ட […]
விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே கீழ தாயில்பட்டியில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் ஜூலை 6, 2025 அன்று காலை 10:30 மணியளவில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், நான்கு பேர் படுகாயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம், உள்ளூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெடி விபத்து காரணமாக ஆலையில் உள்ள 15-க்கும் மேற்பட்ட உற்பத்தி அறைகள் முற்றிலும் சிதறி […]
சென்னை: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்காக விண்ணப்பங்கள் ஜூலை 7, 2025 முதல் வீடு வீடாக வினியோகிக்கப்பட உள்ளன. இந்தத் திட்டம், பொருளாதார ரீதியாக பின்தங்கிய மகளிருக்கு நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, இந்தத் திட்டத்தை திறம்பட செயல்படுத்துவதற்காக விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. விண்ணப்ப வினியோகப் பணி, மக்களை நேரடியாகச் சென்றடையும் வகையில், தமிழகம் முழுவதும் தொடங்கப்பட […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் உத்திகளை வகுக்க, திமுக, அதிமுக, பாஜகவைப் போலவே தனித்தனி குழுவை அமைத்து செயல்படுத்தி வருகிறது. விஜய்யின் தலைமையில் இயங்கும் இந்தக் கட்சிக்கு, ஜான் ஆரோக்கிய சாமி, ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் ஏற்கனவே ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். மேலும், பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், தனது சிம்ப்பிள் சென்ஸ் அனல்ட்டிக்ஸ் நிறுவனத்தின் மூலம், தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் தவெகவிற்கு உத்திகளை […]
திண்டிவனம்: பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் இருந்து தலைவர் அன்புமணி ராமதாஸை நீக்குவதாக ஜூலை 5, 2025 அன்று திண்டிவனத்தில் அறிவித்தார். இந்த முடிவு, கட்சியின் உட்கட்சி மோதல்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. அன்புமணியை நீக்கியதைத் தொடர்ந்து, புதிய 21 பேர் கொண்ட தலைமை நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, சேலம் மேற்கு எம்எல்ஏ அருள், மற்றும் முன்னாள் ரயில்வே இணை […]
சென்னை : ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு தொடங்க உள்ளது. இந்த திட்டத்தை வரும் 15ம் தேதி கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் ஜூலை 15 முதல் நவம்பர் வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் 10,000 முகாம்கள் நடத்தப்படும், இதில் நகரப் பகுதிகளில் 3,768 முகாம்களும், […]
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியனுடன் இணைந்து, இன்று கொங்கந்தான்பாறை விலக்கு பகுதியில் நடைபெறும் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என விஜய் அறிவித்தது குறித்த கேள்வி? பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, “விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” என்று நகைச்சுவையாக கருத்து தெரிவித்தார். அமைச்சர் கே.என்.நேருவின் […]
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, பொத்தூரில் உள்ள வள்ளலார் நினைவிடத்தில் இருந்து ஆம்ஸ்ட்ராங் நினைவிடம் நோக்கி பேரணியாக சென்றனர். அதில் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி மற்றும் புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். நினைவிடம் வந்தடைந்த பின், […]
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இதுவரை 25-க்கும் மேற்பட்டோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இதுதொடர்பான விசாரணை இன்னும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, இன்று சென்னையில் நினைவேந்தல் நிகழ்ச்சி மற்றும் சங்கமம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், பொத்தூரில் உள்ள அவரது நினைவிடத்தில் ஆம்ஸ்ட்ராங்கின் […]
சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். திமுகவின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரைக்கு எதிராக ”புரட்சித் தமிழரின் எழுச்சி பயணம், மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற பரப்புரை லோகோவை இபிஎஸ் வெளியிட்டார். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கத்தோடு வரும் 7-ம் தேதி கோவை மேட்டுப்பாளையத்தில் தனது சுற்றுப்பயணத்தை இபிஎஸ் தொடங்குகிறார். நேற்று முன்தினம் (ஜூலை 3) […]
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் துப்பாக்கி ஏந்திய 10 NSG கமாண்டோக்கள், 55 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், இதில், குண்டு துளைக்காத வாகனங்களும் அடங்கும். அண்மையில் இபிஎஸ்-க்கு இ-மெயில் மூலம் மர்ம நபர்கள் இரு முறை கொலை மிரட்டல் விடுத்தது […]