தில் இருந்த பெரியார் சிலையை தொட்டுப்பாருங்க ....கனவிலும் கூட வரக்கூடாது .....

DMK chief executive Stalin said that the struggles against the Periyar idol busting will no longer have any idea of removing the Periyar statue.

தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், பெரியார் சிலை உடைப்புக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களால் இனி கனவிலும் கூட பெரியார் சிலையை அகற்றும் எண்ணம் யாருக்கும் ஏற்படாது என  தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின், பெரியார் சிலை விவகாரம் தொடர்பாக , தனது தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “பெரியார் சிலை உடைப்புக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களால் இனி கனவிலும் கூட பெரியார் சிலையை அகற்றும் எண்ணம் யாருக்கும் ஏற்படாது. பெரியாரின் பேரப்பிள்ளைகளான தி.மு.க தோழர்கள் தாங்கள் யார் என்பதை காட்டும் தருணம். உச்சந்தலைக்கு பித்தம் ஏறியதுபோல் பெரியார் சிலையை அகற்றுவோம் என்று கூறுகிறார்கள். சிலையை அகற்றும் எண்ணம் யாருக்காவது மிச்சமிருந்தால் தொட்டுப் பார்க்கட்டும்.

மானமுள்ள தமிழர்களுக்கு இப்போதும் பெரியாரின் கொள்கைகளே ஆயுதம். தன்மானத் தமிழ் இனத்தின் தனிப்பெருந்தலைவர் தந்தை பெரியாரின் புகழை போற்றிக் காப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Periyar touches the statue …. not even dreaming …..