சென்னை :பிரதமர் நரேந்திர மோடியின் ஆகஸ்ட் 26, 2025 அன்று தமிழ்நாட்டிற்கு திட்டமிடப்பட்டிருந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பயணம் ரத்து செய்யப்படவில்லை, அதற்கு மாறாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தமிழகம் வருவதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும், மாற்று பணிகள் மற்றும் முக்கிய அலுவல்கள் காரணமாக இந்தப் பயணம் ஒத்திவைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பயணத்தில், பிரதமர் மோடி சிதம்பரம் நடராஜர் கோயிலில் “மனதின் குரல்” நிகழ்ச்சியில் உரையாற்றவும், திருவண்ணாமலை மற்றும் சிதம்பரம் கோயில்களில் தரிசனம் செய்யவும் திட்டமிட்டிருந்தார்.
முன்னதாக, பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக கடந்த ஜூலை 26 தமிழ்நாடு வந்தார். அப்பொழுது, தூத்துக்குடியில், அவர் 4,900 கோடி ரூபாய் மதிப்பிலான பல உள்கட்டமைப்பு திட்டங்களை திறந்து வைத்தார்.
பின்னர், ராஜேந்திர சோழனின் பிறந்தநாளை முன்னிட்டு நடந்த ஆடி திருவாதிரை விழாவில் கலந்துகொண்டார். மேலும், அங்கு 1,030 கோடி ரூபாய் மதிப்பிலான ரயில்வே திட்டங்களை தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
