முடிந்தால் அவர் மீது கை வைத்து பாருங்கள் – முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் பேச்சு

Former minister CV Shanmugam speaks at an AIADMK rally calling for the arrest of the BJP leader if you have the courage

உங்களுக்கு தைரியம் இருந்தால் பாஜக தலைவரை கைது செய்து பாருங்கள் என்று அதிமுக ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பேச்சு.

திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அதன்படி, விழுப்புரத்தில் நடந்த அதிமுக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தற்போது உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசாரின் வீடுகளிலியே சோதனையிடுவோம். அதிகாரிகளின் சட்டையை கழட்டுவோம் என்றார்.

இதனைத்தொடர்ந்து பேசிய அவர், திமுக அரசின் மீது அவதூறு பரப்புவதாக கூறி மாரிதாசை கைது செய்த காவல்துறையால் பாஜக மாநில மாநிலத் தலைவர் அண்ணாமலையை கைது செய்ய முடியுமா? முடிந்தால் அவர் மீது கை வைத்து பாருங்கள். உங்களுக்கு தைரியம் இருந்தால் பாஜக தலைவரை கைது செய்து பாருங்கள் பார்ப்போம் என தெரிவித்தார்.

மேலும், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாச்சலம் தற்கொலை செய்துகொண்டதில் வடமாவட்டத்தை சேர்ந்த திமுக அமைச்சரின் தூண்டுதல் இருக்கிறது என்றும் குற்றசாட்டினார்.