செந்தில் பாலாஜி  நன்றி மறந்து பேசுகிறார்...! அமைச்சர் கடம்பூர் ராஜூ

செந்தில் பாலாஜி  நன்றி மறந்து பேசுகிறார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் அதிரடி மாற்றங்கள் ஏற்றப்பட்டது.

செந்தில் பாலாஜி  நன்றி மறந்து பேசுகிறார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் அதிரடி மாற்றங்கள் ஏற்றப்பட்டது. இதையடுத்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த செந்தில்பாலாஜி, அக்கழகத்தின் அமைப்பு செயலாளராக அறிவிக்கப்பட்டார். மேலும், அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் செந்தில் பாலாஜியும் ஒருவர் ஆவர்.நேற்று  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்று சால்வை அணிவித்தார்.

unknown node

இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,அதிமுகவில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, தற்போது நன்றி மறந்து அதனை மூழ்கும் கப்பல் என பேசுகிறார். கட்சி மாறி வருபவர்கள் ஒரு நிலைப்பாட்டில் இருக்க மாட்டார்கள் என்பதற்கு இவர் ஒரு உதாரணம் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.