தமிழ்நாடு அரசு இரண்டாம் நிலை காவலர் பதவிகளுக்கான தேர்வு அறிவிப்பு.!

தமிழகத்தில் 2,833 காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

Tnpolice

சென்னை :தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) 2,833 காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இதில் இரண்டாம் நிலை காவலர்கள் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை), இரண்டாம் நிலை சிறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான காலியிடங்கள் அடங்கும்.

இதற்கான எழுத்துத் தேர்வு நவம்பர் 9ம் தேதி அன்று நடைபெறும். விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 21, 2025 ஆகும். மொத்தம் 3,644 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன, இதில் காவல்துறைக்கு 2,833 , சிறைத்துறைக்கு 180, மற்றும் தீயணைப்புத் துறைக்கு 631 இடங்கள் உள்ளன.

தேர்வர்கள் ஆன்லைனில்www.tnusrb.tn.gov.inஇணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் ஆகஸ்ட் இன்று முதல் தொடங்கி விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 21 தேதி வரை விண்ணபிக்கலாம். மேலும் விவரங்களுக்கு TNUSRB இணையதளத்தைப் பார்க்கவும்.