அஜித்குமார் ரேஸிங் அணியில் இணைந்த தமிழ்நாடு ரேஸர் நரேன் கார்த்திகேயன்.!

இந்தியாவின் முதல் F1 வீரர் நரேன் கார்த்திகேயன் அஜித்குமார் ரேசிங் அணியில் இணைந்ததைத் தொடர்ந்து அஜித் வரவேற்பு அளித்துள்ளார்.

AjithKumar - Narain Karthikeyan

சென்னை :ஆசிய லீ மான்ஸ் தொடருக்கான தயாரிப்பில், ஒரு பகுதியாக நடிகரும் பைக் ரெஸ் வீரருமான அஜித் குமாரின் அணியான அஜித் குமார் ரேசிங், இந்தியாவின் முதல் F1 டிரைவரும், தமிழ்நாட்டைச் சேர்ந்த ரேஸருமான நரேன் கார்த்திகேயன் அணியில் இணைவார் என்று அறிவித்துள்ளது.

நரேன் உடன் இணைந்து கார் பந்தயத்தில் ஈடுபடுவது சிறப்பு என அஜித்குமார் மகிழ்ச்சி. வரவிருக்கும் ஆசிய லீ மான்ஸ் தொடரில் அஜித்துடன் இணைவதில் மகிழ்கிறேன் என நரேன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் முதல் F1 வீரர் நரேன் கார்த்திகேயன் அஜித்குமார் ரேசிங் அணியில் இணைந்ததைத் தொடர்ந்து அஜித் வரவேற்பு அளித்துள்ளார்.

இது தொடர்பாக அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில், ”நரேன் அணியில் இணைவது உண்மையிலேயே ஒரு பாக்கியம். அவருடன் பந்தயத்தில் ஈடுபடுவது ஒரு மரியாதை. நரேனுடன், இந்த ஆசிய லீ மான்ஸ் தொடர் நம் அனைவருக்கும் மிகவும் சிறப்பு வாய்ந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.

unknown node

யார் இந்த நரேன் கார்த்திகேயன்?

நரேன் 1992 ஆம் ஆண்டு இந்திய ஃபார்முலா மாருதியில் பந்தயத்தில் அறிமுகமானார். அதன் பின்னர்,  1994 இல் பிரிட்டிஷ் ஃபார்முலா ஃபோர்டு வின்டர் சீரிஸ், 1996 இல் ஃபார்முலா ஆசியா, 1999 இல் கொரியா சூப்பர் பிரிக்ஸ் மற்றும் 2019 இல் சூப்பர் ஜிடி x டிடிஎம் ட்ரீம் ரேஸ் உட்பட பல சந்தர்ப்பங்களில் முதலிடத்தைப் பிடித்தார்.

மேலும், அவர் 2005, 2006, 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் ஃபார்முலா ஒன் பந்தயங்களில் பங்கேற்றுள்ளார். ஆசிய லீ மான்ஸ் தொடர், பிரான்சின் லீ மான்ஸ் நகரில் நடைபெற்ற புகழ்பெற்ற 24 மணி நேர சகிப்புத்தன்மை பந்தயத்தால் ஈர்க்கப்பட்டது.