மத்திய அரசு நிதியை சரியான நேரத்தில் வழங்கணும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதில் அரசு அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

m k stalin

சென்னை :இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னையில் ஊரக வளர்ச்சித்துறை கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசு தன் நிதியை சரியான நேரத்தில் வழங்க வேண்டும் எனவும், மக்களுக்கு தேவையான அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படுகிறது எனவும் முக்கியமான விஷயங்களை பற்றி பேசினார்.

இது குறித்து பேசிய அவர் ” வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றுவதில் அரசு அக்கறையுடன் செயல்பட்டுக்கொண்டு வருகிறது. அதற்கு உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் பல விஷயங்களை சொல்லலாம். குறிப்பாக, தமிழகத்தில் மகளிர் சுயஉதவி குழுக்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.மொத்தமாக சொல்லவேண்டும் என்றால் தமிழகத்தில் 17,500 குழுக்கள் செயல்பட்டு கொண்டு இருக்கிறது.

தமிழ்நாட்டில் சுயஉதவிக்குழுக்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. 17500 சிறப்பு சுயஉதவிக் குழுக்கள் தமிழ்நாட்டில் செயல்படுகின்றன; ரூ.25.81 கோடி சுழல் நிதி வழங்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் 3.88 லட்சம் சுயஉதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

அதைப்போல, தமிழ்நாட்டில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு நிதியாண்டிற்கு ரூ.3 கோடி என்ற வகையில், 234 தொகுதிகளுக்கும் ரூ.702 கோடி ஆண்டுதோறும் ஒதுக்கிடப்பட்டு, மக்களுக்கு தேவையான அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படுகிறது எனவும் தெரிவித்தார்.

மேலும், தொடர்ந்து பேசிய அவர் ” மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டங்களில் மாநில அரசின் பங்குத்தொகையை எந்தவித காலதாமதமின்றி விடுவிக்கிறோம் அதேபோல மத்திய அரசு தன் நிதியை சரியான நேரத்தில் வழங்க வேண்டும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலிறுத்தி பேசினார்.