சென்னை :சென்னை தியாகராய நகரில் தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சி.ஐ.டி. நகர் பிரதான சாலையை இணைக்கும் வகையில், 164.92 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்திற்கு, மறைந்த தியாகராய நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் நினைவாக “ஜெ. அன்பழகன் மேம்பாலம்” என்று பெயர் சூட்டப்பட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
உஸ்மான் சாலை -சிஐடி நகரை இணைக்கும் இந்த இரும்பு மேம்பாலம் ரூ.165 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. 3,700 மெட்ரிக் டன் இரும்பினால் 2 கி.மீ. தூரத்துக்கு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
அந்த தொகுதியின் எம்.எல்.ஏ. ஜெ.கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று, இந்த மேம்பாலத்திற்கு மறைந்த திமுக முன்னாள் எம்.எல்.ஏ அன்பழகனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு சுமார் 40,000 வாகனங்கள் ஜெ.அன்பழகன் மேம்பாலத்தை பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
