ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி கூடாது என்பதே பாஜக நிலைப்பாடு என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அனுமதி கூடாது என்பதே பாஜகவின் நிலைப்பாடு ஆகும். அதேபோல் வரம்புமீறி பேசிவிட்டு உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டேன் என மாற்றுக் கருத்து கூறுவது ஏற்புடையது அல்ல. சட்டவிதிகளுக்கு உட்பட்டு எம்எல்ஏ கருணாஸ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.