செங்கோட்டையில் பரபரப்பு ....!இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல்...!144 தடை உத்தரவு...!டாஸ்மாக் கடைகளை மூட அதிரடி உத்தரவு...!

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் 144 தடை உத்தரவு பிறப்பித்து ஆட்சியர் ஷில்பா பிரபாகர் ஆணை பிறப்பித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் 144 தடை உத்தரவு பிறப்பித்து ஆட்சியர் ஷில்பா பிரபாகர் ஆணை பிறப்பித்துள்ளார்.

நெல்லை மாவட்டம்  செங்கோட்டை மற்றும் தென்காசியில் 144 தடை உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது .நேற்று விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் ஏற்பட்டதையடுத்து  செங்கோட்டை, தென்காசி ஆகிய 2 தாலுகாக்களில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

unknown node

இதேபோல் இந்த பகுதிகளில்  உள்ள  டாஸ்மாக் கடைகளை மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை (செப்.,15) காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு தொடரும் எனவும் நெல்லை  மாவட்ட ஆட்சியர்  ஷில்பா பிரபாகர்தெரிவித்துள்ளார். நேற்று இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .