ஜெயலலிதா இறப்பிற்கு சசிகலா குடும்பத்தினர்தான் காரணம் என்று மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.
unknown nodeமுன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. விசாரணை செய்வதற்காகத் தமிழக அரசு 25.09.2017 அன்று, ஓய்வு பெற்ற நீதிபதி அ.ஆறுமுகசாமி-யைக் கொண்ட ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒன்றை நியமித்தது.அதன் பின்னர் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவுடன் வேதா நிலையத்தில் தங்கி இருந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
unknown nodeஅதேபோல் தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி நடைபெறுகிறது.அதேபோல் தினகரன் தனக்கென எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பி -க்களை வைத்துகொண்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியைத் தொடக்கி அதற்கு துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மற்றும் பொதுச்செயலாளர் சசிகலா ஆவார்.
unknown nodeஇந்நிலையில் மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி சசிகலா குறித்து பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,ஜெயலலிதா இறப்பிற்கு சசிகலா குடும்பத்தினர்தான் காரணம்.அதேபோல் ஜெயலலிதாவை உயர் சிகிச்சைகாக வெளிநாடு அனுப்பாதது ஏன்? என்றும் கேள்வி யெழுப்பி உள்ளார் மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி.