கொரோனாவை விரட்ட விளக்கு பிடித்து, கை தட்டியதை விட இது கேவலமான செயல் அல்ல என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் புகைப்படம் ஒன்று, சமூக வலைதளத்தில் வைரலானது. அதில் அவர், I am a தமிழ் பேசும் indian என பதியப்பட்ட டி-சர்ட் அணிந்திருந்தார். அவரது உடன் இருந்தவர் hindi theriyaathu poda (ஹிந்தி தெரியாது போடா) என பதியப்பட்ட டி சர்ட் அணிந்திருந்தார்.
இந்த புகைப்படம், இணையத்தில் மிகவும் வைரலானதை தொடர்ந்து, #ஹிந்தி_தெரியாது_போடா எனும் ஹேஸ்டேக் டிவிட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகியது. அதனைதொடர்ந்து, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ஹிந்தி தெரியாது போடா என்ற வாசகம் கொண்ட டி-சர்ட்டை அணிந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கருத்தரங்கில் கலந்துகொண்டார்.
இந்நிலையில், இதுகுறித்து தலைவர் உதயநிதி ஸ்டாலின், செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர், தமிழை வளர்ப்பதற்கு டீ-ஷர்ட் போடவில்லை எனவும், இந்தி திணிப்பை எதிர்ப்பதற்கே நாங்கள் டீ ஷர்ட் போட்டோம் என தெரிவித்தார். அதுமட்டுமின்றி, கொரோனாவை விரட்ட விளக்கு பிடித்து, கை தட்டியதை விட இது கேவலமான செயல் அல்ல என தெரிவித்துள்ளார்.