கைது செய்ய 2 தனிப்படை ...! சிங்கம் இங்கேதான் உட்கார்ந்திருக்கு(ஹெச்.ராஜா)...! முடிந்தால் கைது செய்து பார்...!பாஜக நிர்வாகி சவால்

சிங்கம் இங்கேதான் உட்கார்ந்திருக்கு(ஹெச்.ராஜா), முடிந்தால் கைது செய்து பார்'' என்று பாஜகவை சேர்ந்த ஒருவர் சவால் விடுத்துள்ளார்.

சிங்கம் இங்கேதான் உட்கார்ந்திருக்கு(ஹெச்.ராஜா), முடிந்தால் கைது செய்து பார்” என்று பாஜகவை சேர்ந்த ஒருவர் சவால் விடுத்துள்ளார்.

புதுகோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்திக்கு சென்ற ஹெச்.ராஜா அங்கே நின்ற காவல்துறையினரையும் , நீதிமன்றத்தையும் கடுமையாக திட்டனார்.அவர் நீதிமன்றத்தை மிக கொச்சையாகவும், தமிழக காவல்துறை முழுவதுமாக ஊழல் நிறைந்து விட்டதாகவும் மற்றும் காவல்துறை குறித்து கொச்சையான கருத்துகளையும் அவர் கூறினார்.அப்படி அவர் பேசும்போது மதவாதத்தை தூண்டும் சில வார்த்தைகளையும் பேசினார்.

இதனால் நேற்று திருமயம் போலீசார் உயர்நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக எச். ராஜா உள்ளிட்ட 18 பேரின் மீது வழக்கு பதிவு செய்தனர்.அவர் மீது காவல்துறை சட்டவிரோதமாக கூடுதல், அரசு ஊழியரின் கடமையை செய்ய விடாமல் தடுத்தல், அரசு ஊழியரின் உத்தரவை மதிக்காமல் பேசுதல், பிற மதத்தினரை புண்படுத்தும் விதமாக பேசுதல், ஆபாசமாக பேசுதல் என பிரிவு (143 ,188 ,153 (A),290, 294 (b) 353 ,505 (1 )(b )(c ),506 (I)IPC) உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

unknown node

இந்நிலையில் அவர் திண்டுக்கல்லில் உள்ள இந்து முன்னணி சார்பில் நடைபெறும் விநாயகர் சதூர்த்தி பொதுக்கூட்டத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பங்கேற்றார்.அங்கு ஏராளமான போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

அப்போது பேசிய இந்துமுன்னணிப் பிரமுகர் வினோத் என்பவர் நாளிதழ் செய்தியைக் காட்டி, ”ஹெச்.ராஜா தலைமறைவாம். பேப்பரில் போட்டிருக்கிறார்கள். உங்களுக்கு எதாவது தெரியுதா? சிங்கம் இங்கேதான் உட்கார்ந்திருக்கு, முடிந்தால் கைது செய்து பார்” என்று சவால் விடுத்தார்.

unknown node

ஆனால் நேற்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை கைது செய்ய காவல்துறை  2 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 10 பேர் கொண்ட இரு தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றது என்று  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா 4 வாரத்தில் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.