சென்னை :வக்பு திருத்த சட்டம் 2025-இன் சில முக்கிய அம்சங்களுக்கு உச்சநீதிமன்றம் இன்றுதற்காலிக தடை விதித்துள்ளது. இந்த சட்டம், இஸ்லாமிய மத வழிபாட்டு சொத்துகளின் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்துவதற்காக 2025 ஏப்ரலில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
வக்ஃப் (திருத்த) சட்டம் அமல்படுத்தப்பட்டு சில மாதங்களுக்குப் பிறகு, இதன் அரசியலமைப்புரிமைக்கு எதிரான 70-க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய விசாரணை மே மாதத்தில் ஒத்தி வைக்கப்பட்டு, இன்றைய தினம் (செப்டம்பர் 15) இடைக்கால உத்தரவு வழங்கப்பட்டது. இந்த உத்தரவு சட்டத்தின் முழு அமல்பாட்டுக்கு தடை விதிக்கவில்லை, ஆனால் சில முக்கிய பிரிவுகளுக்கு தற்காலிக தடை விதித்துள்ளது.
இதனையடுத்து, வக்பு சட்டத்தின் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வரவேற்பு அளித்து வருகிறார்கள். அந்த வகையில், திருத்த சட்டத் திருத்தத்துக்கு இடைக்கால தடைவிதித்த உச்சநீதிமன்ற உத்தரவுக்குதவெக தலைவர் விஜய் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தள பதிவில், ” உச்சநீதிமன்ற உத்தரவு நீதி, அரசியலமைப்பு, அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்கான மகத்தான வெற்றியை குறிக்கிறது. நீதி, சமத்துவம், மத சுதந்திரத்தை குறைக்க முற்படும் விதிகளை உச்ச நீதிமன்றம் நிறுத்தியுள்ளது.
நீதிமன்ற இடைக்கால உத்தரவு, நீதிக்கும் அரசியலமைப்புச் சட்ட மதிப்புகளுக்கும் கிடைத்த வெற்றி. தவெஜக தலைமையில் எங்கள் மனுவை விசாரித்த நீதிமன்றம், நீதி, சமத்துவம் மற்றும் மத சுதந்திரத்தை கடுமையாகப் பாதிக்கும் விதிகளை நிறுத்தி வைத்துள்ளது. அரசு அதிகாரி முன் ஆக்கிரமிப்பு தகராறு நிலுவையில் இருக்கும்போது, வக்ஃப் சொத்தை அரசு அங்கீகரிப்பதை ரத்து செய்ய அனுமதிக்கும் விதியை நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இதற்கிடையில் மூன்றாம் தரப்பு உரிமைகளை உருவாக்க முடியாது.
மத்திய வக்ஃப் கவுன்சிலில், முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களின் எண்ணிக்கை 4 ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது என்றும், மாநில வக்ஃப் வாரியங்களில், முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களின் எண்ணிக்கை 3 ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வெற்றியை அடைவதில் அவர்களின் சிறந்த முயற்சிகள் மற்றும் விலைமதிப்பற்ற பங்களிப்புக்காக சட்டக் குழுவிற்கு நாங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
The Supreme Court’s landmark order on the Waqf (Amendment) Act 2025 marks a resounding victory for justice, constitutional values, and the protection of fundamental rights. Acting on our petition under the leadership of @TVKVijayHQ, amongst others in the batch, the Hon’ble Court…
— TVK Party HQ (@TVKPartyHQ) September 15, 2025
