பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் நேற்று ஐநா சபையில் பல நாட்டு தலைவர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார். அப்போது இந்தியாவில் அவர் ஆட்சியில் செய்துள்ள திட்டங்கள், வருங்கால திட்டங்கள் குறித்தும் பேசினார்.
அவர் பேசுகையில், 3000 ஆண்டுகள் பழைமையான தமிழ் மொழியில் இருந்து கூறுகிறேன் என கனியன் பூங்குன்றனார் கூறிய ‘ யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற கூற்றை நினைவு கூர்ந்தார்.
இதற்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திரைப்பட பாடலாசிரியரும், தமிழ் எழுத்தாளருமான கவிப்பேரரசு வைரமுத்து தந்து டிவிட்டர் பக்கத்தில், ‘ ஐ.நா சபையில் தமிழ் சொன்னீர்கள் பேரானந்தம்! பிரதமர் அவர்களே. தாயகத்திலும் தமிழ் உயர்த்தினால் நன்றி உரைப்போம் நாங்களே. என தனது வாழ்த்தையும் நன்றியையும் தெரிவித்து, தனது அன்பான கோரிக்கையையும் பதிவிட்டார்.
unknown node