சென்னைக்கு அருகே மையம் கொண்டுள்ள 'வலுவிழந்த டிட்வா'! வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

ditwah cyclone

சென்னை :பல நாட்களாக தமிழ்நாட்டை அச்சுறுத்தி வந்த டிட்வா புயல் இப்போது பெருமளவு வலுவிழந்துவிட்டது. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இன்று காலை வெளியிட்ட அறிவிப்பின்படி, டிட்வா இப்போது “ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்” (Deep Depression) ஆக மாறியுள்ளது. இது சென்னையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே சுமார் 30 கி.மீ. தொலைவில் மட்டுமே உள்ளது. மையம் கொண்டுள்ளது.இந்த ஆழ்ந்த தாழ்வு மண்டலம் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் வடக்கு திசையில் நகர்ந்து வருகிறது.

அடுத்த 12 மணி நேரத்தில் இது மேலும் வலுவிழந்து “காற்றழுத்த தாழ்வு மண்டலம்” ஆக மாறிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, புயல் முழுமையாகக் கரையைக் கடந்து விட்டது, இனி பெரிய காற்று அல்லது புயல் அபாயம் இல்லை. இருப்பினும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.

சில இடங்களில் 10-15 செ.மீ. மழை பதிவாகலாம். மக்கள் தேவையில்லாமல் வெளியே வராமல், குறைந்த இடங்கள் மற்றும் மரங்களுக்கு அருகில் செல்லாமல் இருக்குமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், சென்னை வானிலை மையம் ஏற்கனவே கொடுத்த தகவலின் படி இன்று  01-12-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.