மதுரை :மதுரை மாநாட்டில்கலந்து கொண்ட த.வெ.க தலைவர் விஜய் திமுக, பாஜகவை விமர்சனம் செய்தும் விஜயகாந்த் மற்றும் எம்ஜிஆர் குறித்தும் பல விஷயங்களை பேசினார். மாநாட்டு மேடையில் 35 நிமிடங்கள் உரையாற்றினார். தவெக தலைவர் விஜய் மாலை 4.50 மணிக்கு உரையை தொடங்கிய விஜய் 5.25 மணிக்கு முடித்தார்.
அப்படி பரபரப்பாக பேசிய விஜய், தவெக வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதாகக் கூறி கூட்டத்தை அதிர வைத்தார். தான் மதுரையில் போட்டியிடுவதாக அவர் தெரிவித்த உடனே, தொண்டர்கள் ஆரவாரத்தில் ஆர்ப்பரித்தனர். இதனை அடுத்து, மதுரையின் அனைத்து தொகுதிகளையும் கூறி, அனைத்திலும் விஜய் தான் போட்டி என்றார்.
அனைத்து தொகுதியிலும் விஜய் போட்டியிடுகிறார் எனக் கருதி வாக்களிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், ”2026 தேர்தலில் DMK- TVK இடையேதான் போட்டி என விஜய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தவெக அரசியல் ஆதாயத்துக்காக தொடங்கப்பட்ட கட்சி கிடையாது, கொள்கை தலைவர்களின் வழிகாட்டுதலோடு தொடங்கப்பட்ட கட்சி.
நாம் அனைவரும் இந்தியாவின் மாபெரும் மக்கள் சக்தி கொண்ட வெகுஜன மக்கள் படை. மாபெரும் மக்கள் சக்தி அணி அணியாக நம்முடன் இருக்கும் போது, நாம் ஏன் அடிமை கூட்டணியில் சேர வேண்டும். நம் கூட்டணி சுயமரியாதை கூட்டணி.
நம் ஒரே கொள்கை எதிரி பாஜக தான், ஒரே அரசியல் எதிரி திமுக தான், அண்டர்கிரவுண்ட் ஆதாயத்துக்கு கூட்டணி வைக்கும் கட்சி தவெக கிடையாது. தாமரை இலையில் தண்ணீரே ஒட்டாது. அப்படி இருக்கும்போது, TVK எப்படி ஒட்டும் என்றார். மேலும், நேரடி அடிமை கூட்டணியுடன் ஒருபோதும் தவெக இணையாது என்றார்.
மேலும், எம்ஜிஆர் ஆரம்பித்த அதிமுக, தற்போது பொருந்தா கூட்டணியில் சிக்கி தவிப்பதாக அதிமுகவையும் சாடினார். மேலும் அவர், “1967, 1977ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசியலில் நடந்த ஆட்சி மாற்றம் போல் 2026இல் வரலாறு திரும்ப போகிறது” என்றார்.
