காற்றாலை மின்சாரத்தில் ஊழல்...!அமைச்சர் தங்கமணி பதவி விலக ரெடியா ...!ஆதாரத்தை வெளியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

காற்றாலை மின்சாரத்தில் ஊழல் நடைபெற்றதற்கான ஆதாரம் உள்ளது, அமைச்சர் தங்கமணி பதவி விலக தயாரா? என்று  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

காற்றாலை மின்சாரத்தில் ஊழல் நடைபெற்றதற்கான ஆதாரம் உள்ளது, அமைச்சர் தங்கமணி பதவி விலக தயாரா? என்று  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

unknown node

இது தொடர்பாக  திமுக தலைவர் ஸ்டாலின் நெல்லை மண்டல உதவி தணிக்கை அதிகாரியின் அறிக்கையில்  கூறுகையில், காற்றாலை மின்சாரத்தில் ஊழல் நடக்கவில்லை” என்று  மின்துறை அமைச்சர் தங்கமணி மனசாட்சியை அடகு வைத்து விட்டு ஊடகங்களுக்கு பேட்டியளித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.இதோ, ஊழல் நடந்ததற்கான ஆதாரத்தை வெளியிடுகிறேன்.அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா?திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

unknown nodeunknown node

மேலும்  ஆடிட் அதிகாரி “Bogus Energy allotment made without generation” என்று நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் அறிக்கை கொடுத்த பிறகும், அமைச்சர் தன் பேட்டியில் “இது தனியார் ஆலைகளுக்குள் நடைபெற்ற விவகாரம்” என மூடி மறைக்க முயற்சிக்கிறார்.உற்பத்தியே ஆகாத காற்றாலையின் பெயரில் ரூ.9.17 கோடி மதிப்புள்ள மின்சாரம் பெறப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.உங்களுக்கு தைரியமிருந்தால் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடுங்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.