ரூ.18.4 லட்சம் பறிமுதல் – அதிமுக வேட்பாளர் உட்பட 9 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு.!

Katpadi AIADMK candidate Ramu is being prosecuted under 5 sections including 9 attempts to give money to voters

காட்பாடி அதிமுக வேட்பாளர் ராமு உட்பட 9 பேர் மீது வாக்காளர்களுக்கு பணம் தர முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.

தமிழகத்தில் இன்னும் 3 நாட்களிலேயே சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் விநியோகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து வருகிறது.

அந்தவகையில், வாக்காளர்களுக்கு கொடுக்க வைக்கப்பட்டிருந்த ரூ.18.4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளர் ராமு உட்பட 9 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வேட்பாளர் சகோதரர் உள்பட 8 பேரை கைது செய்துள்ளனர்.

மேலும், ரூ.18.41 லட்சம் பணம் காட்பாடி அருகே உணவகத்தில் பறிமுதல் செய்த நிலையில், அங்கு வாக்காளர்களுக்கு பண விநியோக விவரம் அடங்கிய பூத் சிலிப் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்துள்ளனர். தனக்கும் பறிமுதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என காட்பாடி அதிமுக வேட்பாளர் ராமு விளக்கமளித்துள்ளார்.