ராகுல் காந்தி விரைந்து குணமடைய வேண்டும் – முக ஸ்டாலின்

mk Stalin tweeted that he was alarmed to hear the news that his brother Rahul Gandhi had been victimized by Corona.

சகோதரர் ராகுல் காந்தி கொரோனாவால் பாதிக்கப்பட்ட செய்தியை அறிந்து கவலை அடைந்தேன் என முக ஸ்டாலின் ட்வீட்.

லேசான அறிகுறியுடன் கொரோனா தொற்று தனக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், அண்மையில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி பாதுகாப்பாக இருங்கள் என்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து பிரதமர் மோடி, கொரோனாவால் பாதிக்கப்பட்ட ராகுல் காந்தி விரைந்து நலம்பெற பிரார்த்திக்கிறேன் என்றும் நல்ல ஆரோக்கியத்துடன் நலம்பெற வேண்டுகிறேன் எனவும் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ராகுல்காந்தி விரைந்து நலம்பெற வேண்டும் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சகோதரர் ராகுல் காந்தி கொரோனாவால் பாதிக்கப்பட்ட செய்தியை அறிந்து கவலை அடைந்தேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பாதுகாப்பாக இருக்குமாறு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

unknown nodeunknown node