வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 500% வரி விதிக்கும் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவின் நோக்கம், உக்ரைன் மீதான போருக்கு ரஷ்யாவுக்கு பண உதவி செய்யும் நாடுகளை பொருளாதார ரீதியாக தண்டிப்பதாகும். அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரகாம் இந்த மசோதாவை முன்மொழிந்துள்ளார். மேலும் 84 செனட்டர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.இந்தியா, உலகில் அதிக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் மூன்றாவது நாடு. 2022-ல் […]
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல் 9-ம் தேதி வரை 8 நாள் அரசுமுறைப் பயணமாக கானா, ட்ரினிடாட் மற்றும் டொபாகோ, அர்ஜென்டினா, நமீபியா, மற்றும் பிரேசில் ஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதலில், கானா நாட்டிற்கு அரசு முறை பயணமாக முதலில் சென்றுள்ளார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு, கானா நாட்டிற்கு செல்லும் பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி ஆவார். அங்கு, […]
கலிபோர்னியா : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் நீதிமன்றம், ஆண்ட்ராய்டு ஃபோன் பயனர்களின் தகவல்களை அனுமதியின்றி திரட்டியதாக கூகுள் நிறுவனத்துக்கு 314.6 மில்லியன் டாலர் (சுமார் 2,620 கோடி ரூபாய்) அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வழக்கு, கலிபோர்னியாவைச் சேர்ந்த சுமார் 14 மில்லியன் ஆண்ட்ராய்டு பயனர்களை பிரதிநிதித்துவப்படுத்தி, கூகுள் அவர்களின் அனுமதியின்றி, ஃபோன்கள் பயன்பாட்டில் இல்லாதபோதும் தகவல்களை சேகரித்து, விளம்பரங்களுக்காக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டியது. வழக்கில், ஆண்ட்ராய்டு ஃபோன்கள் செயலற்ற […]
வாஷிங்டன் : அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய மசோதாவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த மசோதா, Medicaid எனப்படும் மருத்துவ உதவி திட்டத்திற்கு அரசு வழங்கும் நிதியைக் குறைப்பதோடு, ஒபாமாவின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மலிவு விலை பராமரிப்புச் சட்டத்தை (Affordable Care Act) பலவீனப்படுத்துவதாக உள்ளது எனவும் ஒபாமா எச்சரித்துள்ளார். ஒபாமா எச்சரித்ததாவது, இந்த மசோதா நிறைவேறினால், சுமார் 1.6 கோடி அமெரிக்கர்கள் தங்கள் மருத்துவ […]
வாஷிங்டன் : ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு, 500 சதவிகிதம் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 40% ரஷ்யாவிடம் இருந்துதான் இந்தியா வாங்கி வருகிறது. இந்த நிலையில், ரஷ்யாவுடன் வர்த்தக உறவு வைத்துள்ள நாடுகளுக்கு 500% சுங்க வரி விதிக்கும் அதிகாரம் வழங்கக்கூடிய சட்ட மசோதாவை நிறைவேற்றியது அமெரிக்க செனட். இது தொடர்பான மசோதாவை செனட்டில் முன்மொழிந்து, வாக்கெடுப்புக்கு கொண்டு வர வேண்டும் என்று ஜனாதிபதி டிரம்ப் […]
வாஷிங்டன் : ஓபன் ஏ.ஐ. தலைவர் சாம் ஆல்ட்மன், ”சாட்ஜிபிடி-யை மக்கள் அதிகம் நம்புவதாகவும், ஆனால் செயற்கை நுண்ணறிவு (AI) தவறான தகவல்களையும் கணிப்புகளையும் உருவாக்கக் கூடியது என்பதால் அதை முழுமையாக நம்ப வேண்டாம்” என்று அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து OpenAI இன் அதிகாரப்பூர்வ பாட்காஸ்டின் முதல் எபிசோடில் பேசிய ஆல்ட்மேன், ”AI என்பது தவறுகள் செய்யக்கூடிய ஒரு தொழில்நுட்பம் என்பதை வலியுறுத்தியுள்ளார். இது பயனர்கள் AI-இன் பதில்களை விமர்சன ரீதியாக அணுகவேண்டும் என்பதை உணர்த்துகிறது. ‘ChatGPT […]
வங்கதேசம் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பங்களாதேஷின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இன்று சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) ஆறு மாத சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் செயல்பட்டதாக ஷேக் ஹசீனா மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில், நீதிபதி எம்.டி. கோலம் மோர்டுசா மொசும்தர் தலைமையிலான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம்-1 இன் மூன்று பேர் கொண்ட அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியதாக பங்களாதேஷின் முக்கிய ஆங்கில நாளிதழான […]
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் இடையே ஏற்பட்ட மோதல், மஸ்க்கை நாடு கடத்துவது குறித்த கேள்விக்கு ட்ரம்ப் அளித்த பதிலால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2025 ஜூலை 1 அன்று பத்திரிகையாளர்கள், “மஸ்க்கை நாடு கடத்துவீர்களா?” என்று கேட்டபோது, ட்ரம்ப், “அதைப் பற்றி தெரியவில்லை, அதைப் பார்க்க வேண்டும்,” என்று மழுப்பலாக பதிலளித்தார். இது குறித்து பேசிய அவர் ” மஸ்க்கை நாடு கடத்த […]
வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக ஜூலை 1, 2025 அன்று தெரிவித்தார். இந்த ஒப்பந்தம், இரு நாடுகளின் நிறுவனங்களும் சமமாக போட்டியிடும் வகையில் “மிகக் குறைவான வரிகளை” (Much less tariffs) கொண்டதாக இருக்கும் என்று அவர் கூறினார். இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை (Bilateral Trade Agreement – BTA) ஜூலை 9, 2025 காலக்கெடுவிற்கு முன் முடிவு செய்ய, இந்திய பேச்சுவார்த்தைக் குழு வாஷிங்டனில் […]
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா மற்றும் ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் ஆகியவை இணைந்து ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டு, ராக்கெட் ஏவுதல், விண்வெளி வீரர்களின் ஸ்பேஸ் பயணம், பூமியின் நேரலை காட்சிகளை ஒளிபரப்பவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோடைக்காலம் முதல் அனைத்து உறுப்பினர்களின் ஒரு பகுதியாக, இந்த சேவை தளத்தில் கிடைக்கும் என்று விண்வெளி நிறுவனமும், ஸ்ட்ரீமிங் தளமும் அறிவித்தன. அதன்படி, […]
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில் டொனால்ட் டிரம்பின் நெருங்கிய கூட்டாளியாகவும் ஆலோசகராகவும் இருந்த எலோன் மஸ்க், இப்போது டிரம்பின் மசோதா மீது, கடுமையான விமர்சனத்தை முன் வைத்து வருகிறார். மின்சார வாகனங்களுக்கான வரிச் சலுகைகளை ரத்து செய்யும் மசோதாவை ட்ரம்ப் ஆதரித்ததால், இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. மஸ்க் இந்த மசோதாவைபைத்தியக்காரத் தனமானது மட்டுமல்ல, அழிவுக்கு வழிவகுக்கும் என்று விமர்சித்து, தனது எக்ஸ் […]
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தொழிலதிபர் எலான் மஸ்க்கை கடுமையாக விமர்சித்து, அவர் அரசாங்கத்தின் மானியங்கள் மற்றும் வரிச் சலுகைகள் இல்லாமல் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் போன்ற நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்தியிருக்க முடியாது என்று கூறியுள்ளார். மின்சார வாகனங்களுக்கு (EV) வழங்கப்படும் வரிச் சலுகைகளை நிறுத்தும் மசோதாவை மஸ்க் எதிர்த்ததால், ட்ரம்ப் இந்தக் கருத்தை வெளியிட்டார். மஸ்க் இல்லையென்றால், இந்தச் சலுகைகள் இல்லாமல் தென்னாப்பிரிக்காவுக்கே திரும்பிப் போயிருப்பார் என்றும் ட்ரம்ப் கிண்டலாகக் கூறினார். ட்ரம்பும் […]
காசா: இஸ்ரேலிய விமானப்படை, காசாவின் மேற்குப் பகுதியில் உள்ள அல்-பாகா கடற்கரை உணவகத்தின் மீது 2025 ஜூன் 30 அன்று வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள், மற்றும் செய்தியாளர்கள் உட்பட 22 பேர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் மற்றும் சாட்சிகள் தெரிவித்தனர். இந்த உணவகம், செய்தியாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் உள்ளூர் மக்களால் அடிக்கடி பயன்படுத்தப்பட்டு வந்தது.ஹமாஸ் நடத்தும் காசாவின் சிவில் பாதுகாப்புப் பிரிவின் பேச்சாளர், அல்-பாகா உணவகத்தில் அமைந்திருந்த கூடாரங்களை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட […]
வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், காசாவில் உடனடி போர் நிறுத்தம் கொண்டுவர வேண்டும் என இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஈரான்-இஸ்ரேல் இடையேயான 12 நாள் போரை முடிவுக்கு கொண்டுவந்து, ஜூன் 24, 2025 அன்று போர் நிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்த பின்னர், இஸ்ரேல் காசாவில் தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், டிரம்ப் இந்த அழைப்பை விடுத்துள்ளார். 2025 ஜூன் 28 அன்று, வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “காசாவில் ஒரு வாரத்திற்குள் போர் […]
தெஹ்ரான்: ஈரானின் மூத்த மதகுரு கிராண்ட் ஆயத்துல்லா நாசர் மகாரெம் ஷிராஸி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருக்கு எதிராக பத்வா (மத ஆணை) பிறப்பித்துள்ளார். “இவர்கள் இஸ்லாமிய உலகத்திற்கு எதிரானவர்கள், அவர்களை எதிர்க்க வேண்டும்,” என உலக முஸ்லிம்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். இந்த அறிவிப்பு, ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்கா இடையே நடந்த மோதல்களுக்கு மத்தியில் வந்துள்ளது. இந்த பத்வா, ஜூன் 2025-ல் நடந்த 12 நாள் போருக்கு பதிலாக வெளியிடப்பட்டது. இஸ்ரேல், […]
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான 12 நாள் மோதலின்போது, இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு காமெனியை குறிவைத்து தாக்குதல் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் அமெரிக்காவின் தலையீடு இதைத் தடுத்ததாகவும் ட்ரம்ப் தெரிவித்தார். இஸ்ரேல், ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே மற்றும் ஹெஸ்போல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை படுகொலை செய்து வெற்றி பெற்றிருந்தாலும், காமெனியை குறிவைத்த முயற்சி தோல்வியடைந்தது. இதற்கு ஈரானின் ரகசிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன், அமெரிக்காவின் வீட்டோ (விலக்கு) முடிவும் காரணமாக இருந்ததாக ட்ரம்ப் குறிப்பிட்டார். ஜூன் 27-ஆம் தேதி […]
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை கொஞ்சம் குறைக்கும் வகையில் இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி போர் ஒப்பந்தம் போட்டுள்ள காரணத்தால் அங்கு சற்று பதற்றம் குறைந்திருக்கிறது. இப்படியான சூழலில், இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்த சூழலில், ஈரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமெனி படுகொலை அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளால் பாதுகாக்கப்பட்டார். இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு காமெனியை குறிவைத்து […]
சவூதி : உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி ப்ரோ லீக் அணியான அல் நசார் கால்பந்து க்ளப்பில் மேலும் இரண்டு ஆண்டு ஒப்பந்த நீட்டிப்பில் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம், அவர் அல் நாசரை விட்டு வெளியேறுவது குறித்த பல மாதங்களாக இருந்த ஊகங்களும் முடிவுக்கு வந்துள்ளன. அல் நாசருடன் ஒப்பந்த நீட்டிப்பில் கையெழுத்திட்டதன் மூலம், அவர் 2027 வரை சவுதி அரேபிய கிளப்பில் இருப்பார். இதனால், போர்ச்சுகலின் சிறந்த வீரரான ரொனால்டோ இப்போது […]
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள் மோதிக்கொண்டது இது உலகம் முழுவதும் பெரும் கவலையை ஏற்படுத்தியது. இந்த மோதலில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா சேர்ந்து ஈரானின் மூன்று அணு ஆயுதத் தளங்களை (ஃபோர்டோ, நடான்ஸ், எஸ்ஃபஹான்) குண்டுவீசி தாக்கின. டிரம்ப், இந்தத் தாக்குதல் ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தை அழித்துவிட்டதாகக் கூறினார். ஆனால் அமெரிக்க உளவுத்துறை, அந்தத் தளங்கள் முழுமையாக அழியவில்லை, […]
அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தை (ISS) வெற்றிகரமாக அடைந்து வரலாற்று சாதனை படைத்துள்ளனர். இந்த பயணத்தில் சுக்லாவுடன், நாசாவின் முன்னாள் விண்வெளி வீரர் பெக்கி விட்சன் (அமெரிக்கா), ஸ்லாவோஸ் உஸ்நான்ஸ்கி-விஸ்னிவ்ஸ்கி (போலந்து), மற்றும் திபோர் கபு (ஹங்கேரி) ஆகியோர் பயணித்தனர். இந்த பயணம், தொழில்நுட்ப பிரச்சினைகளால் ஆறு முறை தடைபட்ட பின்னர், ஜூன் […]