லக்னோவை வீழ்த்தி வெற்றி சாதனைகள் படைத்த பெங்களூர்…இறுதிப்போட்டிக்கு செல்லுமா?
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், லக்னோ அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி ஆரம்பமே அதிரடியாக ஆரம்பித்து 20 ஓவர்கள் முடியும்போதும் அதிரடியில் முடித்தது என்று சொல்லலாம். லக்னோ அணியில் மிட்செல் மார்ஷ் 67, ரிஷப் பண்ட் 118 * ரன்கள் என இவர்களுடைய அதிரடி ஆட்டம் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் லக்னோ 227 ரன்கள் எடுத்தது.
அடுத்ததாக 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பெரிய இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கியது. பெங்களூர் அணியும் நாங்களும் அதிரடி காண்பிப்போம் என்பது போல விளையாடியது என்று சொல்லலாம். பெங்களூர் அணியில் விராட் கோலி 54, மயங்க் அகர்வால் 41*, ஜிதேஷ் சர்மா 85* ஆகியோரின் அதிரடி ஆட்டம் காரணமாக 18.4 ஓவர்கள் முடிவிலே 4 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம், பெங்களூர் வெற்றிகரமாக விரட்டி, தங்கள் வரலாற்றில் மிக உயர்ந்த ரன்-சேஸைப் பதிவு செய்து சாதனையையும் படைத்தது. அதைப்போல, ஒரு ஐபிஎல் சீசனில் அனைத்து வெளியூர் போட்டிகளிலும் (7 வெற்றிகள்) வென்ற முதல் அணியாக சாதனை படைத்தது.
சாதனைகள் மட்டுமின்றி வெற்றியின் முலம் புள்ளி விவரப்பட்டியலில் 17 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருந்த பெங்களூர் 19 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. எனவே, நாளை (மே 29)-ஆம் தேதி நடைபெறவுள்ள குவாலிஃபயர் முதல் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொள்ளவிருக்கிறது. இந்த போட்டியில் பெங்களூர் அணி வெற்றிபெற்றது என்றால் நேரடியாகவே இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிடும்.
அப்படி தோல்வி அடைந்தாலும் கூட பெங்களூர் அணிக்கு மீண்டும் ஒரு வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு செல்ல வாய்ப்புகள் கிடைக்கும். எப்படி என்றால், குவாலிஃபயர்2 போட்டியில் மும்பை – குஜராத் அணிகள் மோதும். இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெறுகிறதோ அந்த அணி குவாலிஃபயர் 1-இல் தோல்வி அடைந்த அணியுடன் மோதும். அதில் வெற்றிபெற்றால் தான் இறுதிப்போட்டிக்கு செல்ல முடியும்.
ஒரு வேலை பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் தோல்வி அடைந்தது என்றால் குவாலிஃபயர் 2-வில் வெற்றியடையும் அணியுடன் மோதும். மோதி அதில் வெற்றிபெற்றது என்றால் இறுதிப்போட்டிக்கு செல்லலாம்.
குவாலிஃபயர் 1 போட்டிகளில் பெங்களூர் அணி இதுவரை 4 முறை தகுதிபெற்றுள்ளது.
- கடந்த 2011-ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக முதல் குவாலிஃபயர் போட்டியில் தோல்வியடைந்தது.
- 2016-ஆம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஆண்டில் குவாலிஃபயர் Ptolemy 1-இல் விளையாடி வெற்றி பெற்றது.
- 2020- ஆம் ஆண்டு டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக குவாலிஃபயர் 1-இல் தோல்வியடைந்தது.
- 2021 – ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக குவாலிஃபயர் 1-இல் தோல்வியடைந்தது.
மேலும், இதுவரை ஒரு முறை கோப்பை வெல்லாமல் இருக்கும் பெங்களூர் அணி இந்த முறையாவது வெற்றிபெறவேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். எனவே, அடுத்தடுத்த போட்டிகளில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.