ஐபிஎல் 2024 : மிரட்டிய ஹைதராபாத்.. திணறிய சென்னை அணி..!

ஐபிஎல் 2024 : முதலில் பேட்டிங் செய்த சென்னை  20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

SRHvsCSK

ஐபிஎல் 2024 :முதலில் பேட்டிங் செய்த சென்னை  20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

இன்றைய ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதி வருகிறது.  இந்த போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஹைதரபாத் பந்து வீச முடிவு செய்தது.

இதனால் முதலில் பேட்டிங் செய்த சென்னை  20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தனர். ஹைதராபாத் அணியில் புவனேஷ்வர் குமார், நடராஜன், பாட் கம்மின்ஸ், ஷாபாஸ் அகமது, ஜெய்தேவ் உனட்கட் தலா 1 விக்கெட்டை பறித்தனர்.

சென்னை அணியில்சிவம் துபே மட்டும் 24 பந்தில் 4 சிக்ஸர், 2  பவுண்டரி என மொத்தம் 45 ரன்கள் குவித்தார்.  இடைத்தொடர்ந்து ரகானே 35 ரன்களும், ஜடேஜா 31 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் இருந்தார். தொடக்க வீரர்களான ரச்சின் ரவீந்திர 12 ரன்களும்,  ருதுராஜ் கெய்க்வாட் 26 ரன்களும்  எடுத்தனர்.