INDvAUS : கே.எல்.ராகுல் ஓப்பனிங்...படிக்கல் நம்பர் 3...இந்தியாவுக்கு அறிவுரை கொடுத்த முன்னாள் வீரர்!

இந்திய வீரர்கள் எந்தெந்த இடங்களில் இறங்கினால் சரியாக இருக்கும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் வசீம் ஜாஃபர் பேசியுள்ளார்.

devdutt padikkal kl rahul

பெர்த் :இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இந்த ஆண்டிற்கான பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி நாளை பெர்த் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

நாளை போட்டி நடைபெறவுள்ள நிலையில், இந்திய வீரர்கள் எந்தெந்த இடங்களில் இறங்கினால் சரியாக இருக்கும் என சில வீரர்களின் பெயரை குறிப்பிட்டு தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வசீம் ஜாஃபர் பேசியிருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர் ” ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த போட்டியில் நம்பர் 3-வது இடத்தில் இறங்கி விளையாட சரியான ஒரு நபர் என்றால் தேவதூத் படிக்கல் தான். அவருக்கு அந்த இடத்தில் விளையாட வாய்ப்பு அளித்து பாருங்கள் நிச்சியமாக அவருடைய சிறந்த ஆட்டத்தை கொடுப்பார். அவர் ஒரு இடது கை பேட்ஸ்மேன், எனவே அவர் நம்பர் 3 இல் விளையாட தகுதியானவர்” எனவும் வசீம் ஜாஃபர்  கூறினார்.

அதனை தொடர்ந்து மற்ற வீரர்களைப் பற்றி பேசுகையில், ஜாஃபர் “கேஎல் ராகுலை அணியின் முக்கியமான வீரர் என்பதை எடுத்துக்காட்டு ” இந்திய அணிக்கு ரன்கள் அதிகமாக வேண்டும் என்றால் கே.எல்.ராகுலை  யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் ஓப்பனிங் பேட் செய்ய வாய்ப்புகள் வழங்கவேண்டும். இருவரும் அணியில் நல்ல தொடக்கத்தை கொடுப்பார்கள்.

அதே சமயம் துருவ் ஜூரெலும் எனது விளையாடும் லெவன் அணியில் இருப்பார். ஏனென்றால், அவருடைய ஆட்டமும் நிச்சயமாக சிறப்பாக இருக்கும். ஆனால், அவருக்கு தொடக்கத்தில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் வழங்கினால் அது சரியாக இருக்காது. எனவே, நம்பர் 6-வது இடத்தில் அவரை பேட் செய்ய வைத்தால் சரியாக இருக்கும்” எனவும் வசீம் ஜாஃபர் கூறியுள்ளார்.