பெங்களூர் :IPL 2026 மினி ஏலத்தில் இந்திய ஆல்-ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர் ரூ.7 கோடி என்ற தொகைக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். கடந்த 2025 மெகா ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி அவரை ரூ.23.75 கோடி என்ற பிரமாண்ட தொகைக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த வருடம் அவரது ஃபார்ம் சரியாக இல்லை என்ற விமர்சனங்கள் அதிகமாக எழுந்த நிலையில், இந்த விலை குறைவு பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெங்கடேஷ் ஐயர் KKR அணியில் பல சீசன்களாக விளையாடி வந்தவர். 2025 சீசனில் அவரது பேட்டிங், மற்றும் பவுலிங் ஃபார்ம் சரியாக இல்லை என்று விமர்சனங்கள் எழுந்தன. இதனால் KKR அணி அவரை விடுவித்தது. இந்த மினி ஏலத்தில் RCB அணி அவரை ரூ.7 கோடிக்கு எடுத்தது அணியின் மிடில் ஆர்டர், ஆல்-ரவுண்டிங் தேவையை நிரப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
RCB ரசிகர்கள் இந்த ஏலத்தை உற்சாகமாக வரவேற்றுள்ளனர்.கடந்த மெகா ஏலத்தில் ரூ.23.75 கோடி என்ற உயர்ந்த தொகைக்கு போன வெங்கடேஷ் ஐயர், இப்போது ரூ.7 கோடிக்கு வந்தது விலை வீழ்ச்சியாக பார்க்கப்படுகிறது. அவரது சமீபத்திய ஃபார்ம், டைமிங் பிரச்சினை, போட்டிகளில் சொதப்பல் ஆகியவை இதற்குக் காரணம் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகின்றனர். இருந்தாலும் அவரது திறமை, இந்திய அணி அனுபவம் ஆகியவை RCB-க்கு பயனுள்ளதாக அமையும் என்று நம்பிக்கை உள்ளது.
மொத்தத்தில், வெங்கடேஷ் ஐயரை கழட்டிவிட்ட KKR, இப்போது RCB கை கொடுத்து அவரை பிரமாண்ட விலைக்கு (கடந்த ஏலத்தை ஒப்பிடுகையில் குறைவு என்றாலும்) தூக்கியுள்ளது. இந்த ஏலம் RCB அணியின் பேட்டிங் ஆழத்தை அதிகரிக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஏலம் தொடர்வதால் இன்னும் பல ஆச்சரியங்கள் வரலாம் என்று கிரிக்கெட் உலகம் ஆவலுடன் காத்திருக்கிறது.
