ஜடேஜா, சாம்கரணை விடுவித்தது கடினமான முடிவு! சிஎஸ்கே CEO காசி விஸ்வநாதன் வேதனை!

ஜடேஜா சாம் கரணை ட்ரேட் செய்தது CSK நிர்வாகம் எடுத்ததிலேயே கடினமான முடிவு என சென்னை அணி ceo காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

Featured image

சென்னை :ஐபிஎல் 2026 சீசனுக்கு முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியுடன் பெரிய வீரர் பரிமாற்று ஒப்பந்தத்தை (டிரேட்) முடித்துள்ளது. இதில் RR-இன் கேப்டன் சஞ்சு சாம்சன் CSK-இல் சேர்கிறார், அதற்கு பதிலாக CSK-இன் முக்கிய வீரர்கள் ரவிந்திர ஜடேஜா மற்றும் சாம் கர்ரன் RR-இல் செல்கின்றனர். இந்த டிரேட், IPL வரலாற்றில் ஒரு முக்கியமான முடிவாக அமைந்துள்ளது.

CSK மேனேஜிங் டைரக்டர் கே.எஸ். விஸ்வநாதன் (காசி விஸ்வநாதன்) இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து, “இது அணியின் பயணத்தில் ஒரு கடினமான மாற்றம். ஜடேஜா போன்ற வீரரை 10 ஆண்டுகளுக்கும் மேலாக விட்டு செல்வது மிகக் கடினம்” என்று கூறினார். இந்த டிரேட், அணியின் நீண்ட கால திட்டத்திற்காக எடுக்கப்பட்டது.CSK-இன் முக்கிய வீரர் ரவிந்திர ஜடேஜா, 2012 முதல் அணியின் முதுகெலும்பாக இருந்தவர். 186 IPL போட்டிகளில் 2,198 ரன்கள் அடித்து, 143 விக்கெட்டுகளை எடுத்தவர். 2018, 2021, 2023 சாம்பியன் அணிகளில் முக்கிய பங்கு வகித்தவர்.

சாம் கர்ரன், 2020, 2021, 2025 சீசன்களில் CSK-க்காக 28 போட்டிகளில் 356 ரன்கள், 23 விக்கெட்டுகள். இருவரும் CSK-இன் அன்புக்குரிய வீரர்கள். ஜடேஜாவின் சம்பளம் ரூ.18 கோடியிலிருந்து ரூ.14 கோடியாக குறைக்கப்பட்டு RR-இல் சேர்கிறது, கர்ரன் ரூ.2.4 கோடி. சாம்சன் ரூ.18 கோடி சம்பளத்தில் CSK-இல் சேர்கிறார். இந்த டிரேட், BCCI-ஆல் அங்கீகரிக்கப்பட்டது.

இதனையடுத்து, காசி விஸ்வநாதன், டிரேட் குறித்து விரிவாகப் பேசினார்: “ஜடேஜாவை விடுவிப்பது கடினமான முடிவு. அவர் CSK-இன் வெற்றிக்கு பல வருடங்கள் பாடுபட்டவர். சாம் கர்ரனும் 2020 முதல் சிறப்பாக விளையாடினார். ஆனால் அணிக்கு மாற்றம் தேவை. டாப் ஆர்டர் இந்திய பேட்ஸ்மேன் தேவைப்பட்டது, ஏலத்தில் கிடைக்காது என்பதால் டிரேட் செய்தோம்.” ஜடேஜாவுடன் பேசியபோது, அவருக்கு ஒரு பிரேக் தேவை என்று தெரிந்ததாகவும், பரஸ்பர உடன்பாட்டுடன் முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறினார்.

மேலும், “ரசிகர்கள் ஏமாறுவார்கள், ஆனால் அணியின் எதிர்காலத்திற்காக இது அவசியம்.” “சாம்சன் அனுபவமும், வயதும் CSK-இன் எதிர்காலத்திற்கு ஏற்றது” என்றார். மேலும், 2026 IPL தொடரில் மகேந்திர சிங் தோனியை தக்கவைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் தொடர்கிறார். பதிரானா, தீபக் ஹூடா, விஜய் சங்கர் ஆகியோர் CSK அணியிலிருந்து விடுவிக்கப்படுகின்றனர். அடுத்த மாதம் நடைபெறும் IPL மினி ஏலத்தில் CSK புதிய வீரர்களை சேர்க்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.