தமிழக பாஜக தலைவர் எல். முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றதை அடுத்து புதிய தலைவராக அண்ணாமலை நியமனம். பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை நேற்று விவாக்கம் செய்யப்பட்டு, 43 புதிய மத்திய அமைச்சரகள் பதவியேற்றனர். இதில் தமிழகத்தை சேர்ந்த பாஜக மாநில தலைவர் எல் முருகன் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். இவருக்கு மீன்வளத்துறை, கால்நடை வளர்ப்பு மற்றும் பால் வளத்துறை, தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை உள்ளிட்ட பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக மாநில தலைவர் […]
தமிழ்நாட்டை சேர்ந்த பாஜக தலைவர் எல் முருகன் மத்திய அமைச்சராக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2வது முறையாக பதவியேற்றதற்கு பிறகு முதல் முறையாக இன்று அமைச்சரவை விரிவாக்கத்துடன் மாற்றம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் மத்திய அமைச்சராக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எல் முருகன் பங்கேற்றதால் அவர் அமைச்சராகிறாரா என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலை மத்திய […]
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள மதுரையை சேர்ந்த ரேவதிக்கு வாழ்த்து தெரிவித்த பாஜக மாநில தலைவர் எல் முருகன். டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக 26 வீரர் – வீராங்கனைகள் கொண்ட தடகள அணியை இந்திய தடகள சம்மேளனம் அறிவித்தது. இதில் ஆண்கள் பிரிவில் 17 பேர், மகளிர் பிரிவில் 9 பேர் பங்கேற்கவுள்ளனர். தடகளம், வாள்சண்டை, டேபிள் டென்னிஸ், பாய்மரப்படகு போட்டிகளில் பங்கேற்க தமிழ்நாட்டை சேர்ந்த 11 வீரர் – வீராங்கனைகள் தகுதி […]
தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் பேசியதாக தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடியை, பாஜகவின் தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில், தமிழகத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.ஆர்.காந்தி, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், சி.சரஸ்வதி ஆகியோர் சந்தித்து பேசினர். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், தமிழகத்தில் உள்ள மகாபலிபுரம்,தஞ்சை போன்ற ஆன்மீக சுற்றுலா […]
கொரோனா தடுப்பூசி பற்றாக்குறைக்கு திமுகதான் காரணம் என மாநில பாஜக தலைவர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார். இன்று சென்னை உட்பட 4 மாவட்டங்களில் வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, வடபழனி முருகன் கோவிலில் மாநில பாஜக தலைவர் எல்.முருகன் வழிபாடு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன் பல தளர்வுகள் அளிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் இன்னும் கொரோனா முடியவில்லை, நாம் இன்னும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். முககவசம் கட்டாயமாக அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். […]
தமிழ் மண்ணான புதுச்சேரியில் தற்போது தாமரை மலர்ந்துள்ளது. புதுச்சேரியில் வந்துள்ள பாஜகவின் அலை தமிழகத்திலும் வரும் என எல்.முருகன் தெரித்துள்ளார். புதுச்சேரியில் பாஜக சார்ந்த ஒருவர் முதல் முறையாக சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று புதுச்சேரி சபாநாயகராக பாஜக எம்எல்ஏ செல்வம் பதவியேற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கலந்து கொண்டார். பின்னர், செய்தியர்களிடம் பேசிய எல்.முருகன், தமிழ் மண்ணில் பாஜகவைச் சேர்ந்தவர் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு தமிழக பாஜக சார்பில் வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். […]
தமிழகத்தில் ஜூன் 15 முதல் டாஸ்மாக் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடை திறப்பிற்கு எதிராக பாஜகவினர் இன்று ஆர்ப்பாட்டம். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிக அளவில் காணப்பட்டதல் கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் உள்ளது. தற்பொழுது கொரோனாவின் தாக்கம் தமிழகத்தில் சற்று குறைய தொடங்கி உள்ளதால், ஜூன் 14ம் தேதியுடன் முடிவடைய உள்ள […]
முதலமைச்சர் தன் வாக்குப்படி உயிரிழிந்த பணியாளர் குடும்பங்களுக்கு ரூ .1 கோடியும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கி உத்தரவிடுமாறு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கேட்டுக்கொண்டார். இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் ஏப்ரல், மே, ஜூன் மாத காலத்திற்கு மருத்துவர்களுக்கு ரூ.30,000, செவிலியர்களுக்கு ரூ.20,000, இதர பணியாளர்களுக்கு ரூ.15,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் எனவும் கொரோனா சிகிச்சை பணியின்போது உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்படும் என அறிவித்தார். […]
தமிழகத்துக்குள் பாஜக நுழைந்துவிட்டது என்று மேற்குவங்க வன்முறையை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எல்.முருகன் பேச்சு. மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. இதன்பின் பாஜகவுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வன்முறையாக உருவெடுத்துள்ளது. இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களைக் கண்டித்து தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் […]
தாராபுரத்தில், பாஜக மாநில தலைவர் எல்.முருகனுக்கு வைக்கப்பட்ட பேனர் கிழிப்பு. போலீசார் குவிப்பு. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில், இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில் தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதியில், எல்.முருகன் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கயல்விழியை விட 1,393 வாக்குகள் குறைவாகப் பெற்று தோல்வி அடைந்தார். […]
நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் வெற்றி பெற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியாகிய நிலையில் திமுக அமோகமாக வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் திமுகவின் வெற்றியை திமுக தொண்டர்கள் பலர் கொண்டாடி வரும் நிலையில்,எடப்பாடி பழனிச்சாமி திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் பல்வேறு அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் தொடர்ந்து […]
மக்களை சிந்திக்க வைக்கும் கருத்துக்களை தன் நடிப்பின் மூலம் நகைச்சுவையாக கொண்டு சேர்ப்பதில் சிறந்த நடிகராக விளங்கிய நடிகர் விவேக். நகைசுவை நடிகர் விவேக், நேற்று காலை மாரடைப்பு காரணமாக சென்னையில், உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். நடிகர் விவேக்கின் மறைவை தொடர்ந்து பல அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தனது […]
அண்ணல் அம்பேத்கரை ஒரு ஜாதிக்குள் திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டால் அதை பாஜக தடுக்கும். தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள், மதுரையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர். அம்பேத்கர் அவர்கள் ஒரு சாதிக்கான தலைவர் அல்ல என்பதை அனைவரும்தெரிந்துகொள்ள வேண்டும். அவ்வாறு அண்ணல் அம்பேத்கரை ஒரு ஜாதிக்குள் திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டால் அதை பாஜக தடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் […]
வேளாண் சட்டம் குறித்து விவசாயிகள் உடனான கலந்துரையாடலை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் புறக்கணித்தார். மத்திய வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்திருந்தனர். தாராபுரம் தொப்பம்பட்டியில் விவசாயிகள் உடனான கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கலந்துரையாடலின் போது உயர்மின் கோபுரம், எட்டு வழி சாலை உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்க விவசாயிகள் திட்டமிட்டிருந்தனர். கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்காமல் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் புறக்கணித்ததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். பகல் […]
பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வந்து எதுவேண்டுமானாலும் பேசிக் கூடாது. திருப்பூர் மாவட்டம், தாரப்புரம் தொகுதியில் பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் போட்டியிடுகிறார். அவரையும், மற்ற பாஜக வேட்பாளர்களையும் ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அந்த கூட்டத்தில் திமுக கட்சியை விமர்சித்து பேசியிருந்தார். இந்த பேச்சுக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ள நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களும் இதுகுறித்து பேசியுள்ளார். பிரதமர் மோடியின் பேச்சு குறித்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கூறுகையில், தாராபுரம் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி […]
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்று வரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார். கேரளாவில் பாலக்காடு தேர்தல் பிரச்சாரத்தை முடித்த பின், பிரதமர் மோடி திருப்பூர் மாவட்டம் தாராப்புரத்தில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்தடைந்தார். உடுமலைப்பேட்டை சாலையில் உள்ள அமராவதி திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. பாஜக மாநில தலைவர் எல் முருகனை பிரதமர் மோடியை வெற்றி வேல், வீர வேல் என முழக்கத்துடன் வரவேற்றார். இந்த பொதுக்கூட்டம் தேசிய முற்போக்கு […]
கருப்பர் கூட்டத்திற்கு பின்னால் இருந்தது திமுக என எல்.முருகன் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் பாஜக சார்பில் பாஜக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் போட்டியிடுகிறார். இதைத்தொடர்ந்து, மூலனூர் பகுதியில் எல்.முருகன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது எல்.முருகனுக்கு பொதுமக்கள் சால்வை அணிவித்து வரவேற்றனர். பொதுமக்கள் இலவசமாக வீடு கட்டித் தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு எல்.முருகன் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டித் தரப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் […]
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜகவின் தொலைநோக்கு பத்திரம் என்ற பெயரில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக வரும் சட்டமன்ற தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான தொகுதி மற்றும் வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தற்போது பாஜக தேர்தல் அறிக்கையை மாநில தலைவர் எல்முருகன் வெளியிட்டுள்ளார். இந்த வெளியிட்டு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர். தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜகவின் தொலைநோக்கு பத்திரம் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. […]
எல்.முருகனின் சொத்து மதிப்பு ரூ.2.64 கோடி என்றும், அசையா சொத்து மதிப்பு ரூ.1.14 கோடி என்றும், அசையும் சொத்து மதிப்பு ரூ.1.53 கோடி என்று வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக, அதற்கான தொகுதி மற்றும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் பாஜக மாநில தலைவர் எல் முருகன் போட்டியிடுவதாக பாஜக தலைமை அறிவித்துள்ளது. இதனையடுத்து எல்.முருகன், இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்பொழுது […]
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் பாஜக மாநில தலைவர் எல் முருகன் வேட்புமனு தாக்கல் செய்தார். அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக, அதற்கான தொகுதி மற்றும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் பாஜக மாநில தலைவர் எல் முருகன் போட்டியிடுவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் எல் முருகன் போட்டியிடும் தாராபுரம் தொகுதியல் சார் ஆட்சியரிடம் சற்றுமுன் வேட்புமனு தாக்கல் செய்தார். தாராபுரம் தொகுதியில் திமுக […]