சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சியின் செயற்குழு கூட்டத்தில், முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றி, அதன் நிறுவனர் விஜயை கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவித்தது. இதனை தொடர்ந்து, பரந்தூர் மக்களை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து பேச வேண்டும் என விஜய் வலியுறுத்தியுள்ளார். விமான நிலையம் வராது என்ற உத்தரவாதத்தை ஸ்டாலின் கொடுக்க வேண்டும் எனவும் விஜய் […]
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்றும் கூட்டணி குறித்து முடிவெடுப்பதற்கான முழு அதிகாரமும் விஜய்க்கு அளிக்கப்படுவதாகவும் செயற்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆகஸ்டில் தவெக மாநில மாநாடு நடைபெறும் என்றும், அகக்டோபர் முதல் டிசம்பர் வரை தமிழகம் முழுவதும் விஜய் மக்களை சந்திப்பார் எனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 20 தீர்மானங்கள் ஏற்றி மாநிலச் செயற்குழுக் கூட்டம் முடிவு பெற்றது. […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர், இந்த கூட்டத்தில் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படன. இந்த செயற்குழு கூட்டத்தில் 120 மாவட்டங்கள் மற்றும் 12,500 கிராமங்களில் தவெகவின் கொள்கைகளை விளக்கும் பிரசாரங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விஜய் சுற்றுப்பயணத்திற்கு […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சித் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு முக்கியமான தேர்தல் வியூகங்கள் மற்றும் விஜயின் மாநிலம் தழுவிய சுற்றுப்பயணம் குறித்து ஆலோசனை செய்யப்படவுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அந்த தகவலை போலவே, இன்று நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் சில முக்கியமான முடிவுகளும் […]
திருப்பூர் : மாவட்டம், அவிநாசி அருகே கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா (வயது 27), வரதட்சணை கொடுமை காரணமாக ஜூன் 28, 2025 அன்று பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பேசுபொருளாக வெடித்துள்ளது. தற்கொலை செய்துகொள்வதற்கு முன் அவர் பேசிவிட்டு சென்ற அந்த ஆடியோ இன்னும் தீராத ஒரு சோகமான விஷயமாக இருந்து வருகிறது. மேலும், இந்த சம்பவம் வரதட்சணை கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வை மீண்டும் வலியுறுத்தியது. ரிதன்யாவின் […]
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) சட்டமன்றக் குழு கொறடாவாக உள்ள சேலம் மேற்கு எம்எல்ஏ அருளை மாற்ற வேண்டி, பாமக எம்எல்ஏக்கள் வெங்கடேஸ்வரன், சதாசிவம், மற்றும் மயிலம் எம்எல்ஏ சிவக்குமார் ஆகியோர் சட்டப்பேரவைச் செயலாளரிடம் மனு அளிக்க உள்ளனர். இந்த மனு, புதிய கொறடாவாக மயிலம் எம்எல்ஏ சிவக்குமாரை நியமிக்கக் கோருவதற்காக இன்று (ஜூலை 4, 2025) சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முடிவு, பாமகவில் உட்கட்சி மோதலின் தொடர்ச்சியாக பார்க்கப்படுகிறது. இந்த […]
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. கட்சித் தலைவர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு முக்கியமான தேர்தல் வியூகங்கள் மற்றும் விஜயின் மாநிலம் தழுவிய சுற்றுப்பயணம் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த், இந்தக் கூட்டத்தில் முக்கிய அறிவிப்புகளும், கட்சியின் எதிர்கால திட்டங்களும் விவாதிக்கப்படும் […]
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 05-07-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. 06-07-2025: தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, […]
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் நேற்று (ஜூலை 3, 2025) செய்தியாளர்களைச் சந்தித்து பல முக்கிய விவகாரங்கள் குறித்து பேசினார். சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருளை கட்சியில் இருந்து நீக்குவதற்கு தலைவர் அன்புமணிக்கு அதிகாரம் இல்லை என்று திட்டவட்டமாக கூறினார். “நிறுவனரும் தலைவருமான எனக்கு மட்டுமே நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் உள்ளது. அன்புமணி குறித்த கேள்விகளை என்னிடம் கேட்பதை தவிர்க்கவும், இது எனக்கு […]
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு புகாரில் ஜூன் 28, 2025 அன்று காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அவரது பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி, காவலர்களின் கொடூரமான தாக்குதலை உறுதிப்படுத்தும் திடுக்கிடும் விவரங்களை வெளிப்படுத்தியுள்ளது. அறிக்கையின்படி, அஜித்குமாரின் உடலில் 50-க்கும் மேற்பட்ட காயங்கள் கண்டறியப்பட்டுள்ளன, இதில் 6 […]
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு அவரது கோரிக்கையின் பேரில் தமிழ்நாடு டி.ஜி.பி. அலுவலகத்தால் உத்தரவிடப்பட்டது. முன்னதாக, அஜித்குமார் தாக்குதலை படம் பிடித்த அறநிலையத்துறை ஊழியர் சக்தீஸ்வரன் பாதுகாப்பு கேட்டு டிஜிபிக்கு கடிதம் எழுதிருந்தார். ”எங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று நீதிபதியே கூறியுள்ளார். ஆனால் […]
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் ஜூலை 4 முதல் 8 வரை 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. ஜூலை 7ம் தேதி குடமுழுக்கு நன்னீராட்டு விழா நடைபெற உள்ளது. இது முருகனின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் முக்கிய நிகழ்வாகும். இதனால், குடமுழுக்கு காலை 6:15 முதல் […]
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே மாவநட்டி கிராமத்தில் 13 வயதுடைய 8-ம் வகுப்பு பள்ளி மாணவன் ரோகித் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நேற்று (ஜூலை 2, 2025) மாலை மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்ட ரோகித், தேன்கனிக்கோட்டை – அஞ்செட்டி செல்லும் சாலையில் உள்ள குந்துகோட்டை அருகே முட்புதரில் இன்று […]
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,03-07-2025 முதல் 05-07-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. 06-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, […]
சென்னை : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் நேற்று காலை 8:30 மணியளவில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த பட்டாசு ஆலையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட அறைகளில் 50-க்கும் மேற்பட்டோர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த விபத்தில் ஆலையில் இருந்த 5 அறைகள் இடிந்து தரைமட்டமானது. இதில் பேர் சம்பவ இடத்திலையே பலியாகினர். இதில், மகாலிங்கம்(55), செல்லப்பாண்டியன், ராமமூர்த்தி(38), ராமஜெயம் (27), வைரமணி(32) மற்றும் லட்சுமி […]
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக காவல்துறையால் அழைத்துச் செல்லப்பட்டு, கடுமையாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக, அஜித் குமாரை காவலர்கள் தாக்கியதை கோவில் பணியாளர் சத்தீஸ்வரன் வீடியோவாக பதிவு செய்து, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் சமர்ப்பித்தார். இந்த வீடியோ, காவலர்கள் அஜித் குமாரை பத்திரகாளியம்மன் கோவிலின் பின்புறம் உள்ள மாட்டுத் […]
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருளை கட்சியில் இருந்து நீக்குவதற்கு தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை என்று ஜூலை 2, 2025 அன்று திட்டவட்டமாக தெரிவித்தார். “கட்சியில் நிர்வாகிகளை நியமிக்கவோ, நீக்கவோ முழு அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது. அருள் பாமகவின் கொறடாவாகத் தொடர்ந்து பணியாற்றுவார்,” என்று ராமதாஸ் அறிவித்தார். இந்த அறிவிப்பு, ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையே நீடித்து வரும் அதிகார மோதலின் உச்சமாகப் பார்க்கப்படுகிறது. அன்புமணி, […]
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு புகாரில் ஜூன் 28, 2025 அன்று காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக உள்ள கோயில் பணியாளர் சக்தீஸ்வரன், தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டி தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு கடிதம் எழுதியுள்ளார். சக்தீஸ்வரன், அஜித்குமாரை காவலர்கள் கடுமையாக […]
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை திருட்டு புகாரில் ஜூன் 28, 2025 அன்று காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும், மக்களிடையே கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது காவல்துறையின் செயல்பாடு மீது கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள். […]
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு புகாரில் கடந்த ஜூன் 28ம் தேதி அன்று விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், காவலர்கள் தாக்குதலில் உயிரிழந்த அஜித் குமாரின் வீட்டுக்கு சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இன்று காலை அவரது உருவப் படத்திற்கு மலர் […]