Tamil News Today Live 07 03 2024

Tamil News Today Live : புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு விசாரணை… பிரதமரின் முதல் ஸ்ரீநகர் பயணம்…

By

Tamil News Today Live : புதுச்சேரியில் 9 வயது சிறுமி ஒரு கொடூர கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் நாட்டையே அதிரவைத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 2 பேர் கைதான நிலையில் அடுத்தகட்ட விசாரணையை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக பிரதமர் மோடி ஸ்ரீநகர் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

மக்களவை தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு கூட்டணி, தொகுதி பங்கீடு என இறுதிக்கட்ட வேலைகளில் பிரதான கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இவ்வாறான பல்வேறு தகவல்களை இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

Dinasuvadu Media @2023