அதிரடியாக உயர்த்தப்பட்ட சமையல் எரிவாயு  விலை...!143 சதவீதம் விலை உயர்வு...!

பாகிஸ்தானில்  சமையல் எரிவாயு  விலை 143 சதவீதம் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில்  சமையல் எரிவாயு  விலை 143 சதவீதம் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் பாகிஸ்தானில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சி வெற்றி பெற்றது.இதனால் அந்த கட்சியின் தலைவரும், முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்றார். இந்நிலையில் மக்கள் அதிகளவில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு  விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

unknown node

இது தொடர்பாக பாகிஸ்தான் பெட்ரோலியத்துறை அமைச்சர் குலாம் சர்வர்கான் கூறுகையில்,நேற்று  கூடிய பொருளாதார ஒருங்கிணைப்பு குழு எடுத்த முடிவின் படி விலை உயர்வு அதிகரிக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோகிப்பாளர்களுக்கு 10 சதவீதம் முதல் 143 சதவீதம் வரையில் விலை உயர்த்தப்பட்டுள்ளது. வர்த்தக பிரிவு சிலிண்டர்களுக்கும் 30 சதவீதம் முதல் 57 சதவீதம் விரையில் விலை உயர்த்தப்பட்டுள்ளது.மேலும் எரிவாயு நிறுவனங்கள் பற்றாக்குறையில் இயங்கி வருவதாகவும், பாகிஸ்தான் பெட்ரோலியத்துறை அமைச்சர் குலாம் சர்வர்கான் தெரிவித்துள்ளார்.