கர்நாடக மாநிலத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் கூட்டணியோடு ஆட்சி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இந்த கூட்டணிக்கிடையே அடிக்கடி உரசல்கள் இருந்த போதிலும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் இருந்தனர்.
unknown nodeஇந்த அரசை கலைக்க பாஜக ஆரம்பத்திலிருந்தே நோட்டமிட்ட நிலையில் தற்போது இந்த தகவலை உறுதி செய்யும் விதமாக கர்நாடகா மாநிலத்தை ஆளுகின்ற முதல்வர் குமாரசாமி அரசுக்கு அளித்த ஆதரவை 2 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் வாபஸ் பெற்று உள்ளனர்.தங்களது வாபஸ் கடிதத்தை அம்மாநில கவர்னருக்கு அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில் கர்நாடக அரசை மாற்ற வேண்டும் என்று சுயேட்சை எம்.எல்.ஏ.க்களான நாகேஷ் மற்றும் சங்கர் ஆகியோர் போர்க்கொடி தூக்கி ஆதரவை வாபஸ் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
unknown node