ஷிகார் தவான் அதிரடி ! ஆஸ்திரேலியாவிற்கு 353 ரன்கள் இலக்காக வைத்த இந்திய அணி

இன்றைய போட்டியில் இந்திய அணியுடன் , ஆஸ்திரேலியா அணி மோதி வருகிறது. இப்போட்டி லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டியில் டாஸ் வென்ற

இன்றைய போட்டியில் இந்திய அணியுடன் , ஆஸ்திரேலியா அணி மோதி வருகிறது. இப்போட்டி லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

unknown node

இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா ,ஷிகார் தவான் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து இருவரும் நிதானமாக விளையாடி  இருவரும் அரைசதத்தை நிறைவு செய்தனர்.அதனால் அணியின் எண்ணிக்கையை உயர்ந்தது.

unknown node

அரைசதம் அடித்த சிறிது நேரத்தில் ரோஹித் சர்மா  57 ரன்னில் வெளியேறினார். பிறகு களமிறங்கிய விராட் கோலியும் , ஷிகார் தவான் அதிரடியாக விளையாடினர் . பின்னர் 37-வது ஓவரில் 117 ரன்கள் எடுத்து ஷிகார் தவான் அவுட் ஆனார்.

unknown node

அடுத்ததாக களமிறங்கிய ஹர்திக் பாண்டியா தனது அதிரடி ஆட்டத்தால் 4 பவுண்டரி , 3 சிக்ஸர் எடுத்து 48 ரன்னிலும் , டோனி 27 ரன்னிலும் ,கோலி 82 ரன்னிலும் வெளியேறினார்.இறுதியாக இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 352 ரன்கள்  குவித்தது.

unknown node

ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சில் மார்கஸ் ஸ்டோனெனிஸ் 2 விக்கெட்டையும் ,நாதன் கொல்டர்-நைல், மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் ஆகியோர்  தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினார். 353 ரன்கள் இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்க உள்ளது.