பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல் ..... இனியாவது நடவடிக்கை எடுக்குமா பாகிஸ்தான்?

நம் அண்டை நாடான பாகிஸ்தான் நாட்டின் கவாடர் பகுதியில் உள்ள 5 நட்சத்திர சொகுசு விடுதியில் சரியாக  இன்று மாலை 4.50 மணியளவில் மூன்று  பயங்கரவாதிகள்  திடீரெனஉள்ளே

நம் அண்டை நாடான பாகிஸ்தான் நாட்டின் கவாடர் பகுதியில் உள்ள 5 நட்சத்திர சொகுசு விடுதியில் சரியாக  இன்று மாலை 4.50 மணியளவில் மூன்று  பயங்கரவாதிகள்  திடீரெனஉள்ளே  புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். அங்கு அவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதாக முதல் கட்ட தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

unknown node

இதுகுறித்து பாகிஸ்தான் காவல்துறை கூறியதாவது, 5 நட்சத்திர சொகுசு விடுதியில் வெளிநாட்டினர் யாரும் இல்லை என தெரிவித்துள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் காவல்துறையினர்  குவிக்கப்பட்டுள்ளனர்.இந்த பாகிஸ்தானின் கவாதர் நகரில் பாகிஸ்தானின் நட்பு நாடான  சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகம் அருகே பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர்.இங்கு சீனா, இந்திய பெருங்கடலையும் ஜின்ஜியாங் மாகாணத்தையும் இணைப்பதற்கான துறைமுகத்தை  கட்டி வருகிறது என்பது, குறிப்பிடத்தக்கது.இதனால் பாகிஸ்தானில் தற்போது பரபரப்பான சூழல் நிலவிவருகிறது.