“நீட் தேர்வு – மாணவர்கள் ஏமாந்தது தான் மிச்சம்” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.!
திமுக ஆட்சிக்கு வந்த பின் நீட் தேர்வில் தோற்றுவிட்டதால் 24 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார்.

அரியலூர் : பெரம்பலூரை தொடர்ந்து அரியலூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, பொதுமக்களும், அதிமுக தொண்டர்களும், கூட்டணிக் கட்சி தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
பொதுமக்களிடம் உரையாற்றிய அவர், ” நீட் ரத்து ரகசியம் உள்ளது என உதயநிதி சொன்னார். இன்று துணை முதல்வராக இருக்கிறார். ரகசியத்தை சொன்னாரா? அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வால் பாதிக்கப்படக்கூடாது என 7.5% உள் ஒதுக்கீட்டை கொடுத்ததால், இன்று 2,818 மாணவர்கள் மருத்துவம் படிக்கின்றன.
நீட் தேர்வில் அனிதா இறந்த போது, ஈ.பி.எஸ் நீட் தேர்வில் கவனம் செலுத்தவில்லை, திமுக ஆட்சிக்கு வந்தது நீட் ரத்து செய்வோம் என்றனர். திமுக ஆட்சிக்கு வந்த பின் 24 பேர் நீட் தோல்வி காரணமாக இறந்துள்ளனர். இதற்கு ஸ்டாலின் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். பொய்யான வாக்குறுதி அளித்து மாணவர்களை ஏமாற்றியுள்ளார்.
மாணவர்கள் எதிர்பார்த்த எதிர்மறை தீர்வு கிடைக்காமல், இந்த பொய் காரணமாக எத்தனையோ மாணவர்கள் பாதிக்கப்பட்டார்கள். இன்னும் மக்கள் மனதில் காயம் விட்டு நிற்கும் மிகப்பெரிய வஞ்சக வாக்குறுதி இதுதான். அரியலூர் மற்றும் குன்னம் பகுதிகளில் அதிமுக ஆட்சியில் தடுப்பணைகள் கட்டித் தந்துள்ளோம்.
திமுக ஆட்சியில் எத்தனை தடுப்பணைகள் கட்டியுள்ளார்கள்? ஏழை எளிய மக்கள் கிராமப்புறங்களில் நோய்வாய்ப்பட்டால், அவர்களுக்கு உதவ அம்மா மினி கிளீனிக் கொண்டுவந்தோம்” என்று கடுமையாக சாடியுள்ளார்.