கோவையில் பெண்கள் பள்ளி எதிரே ஒட்டப்பட்டிருந்த இரண்டாம் குத்து திரைப்படத்தின் போஸ்டர்களை நகைக்கடை ஊழிய்யர் ஒருவர் ஆவேசமாக கிழித்து எரிந்துள்ளார். கோவை மாவட்டம் தேர்முட்டி அருகே பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது.பள்ளியின் எதிரே இரண்டாம் குத்து படத்தின் போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது.அதே பகுதியில் நகைக்கடைபணிபுரிந்து வருபவர் திணேஷ் இவர் ஆபசமாக சித்தரித்து ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை எல்லாம் ஒன்றுவிடாமல் கிழித்து எரிந்தார்.தமிழ் சினிமாவில் வெளிவந்த ஹரஹர மஹாதேவகி,இருட்டு அறையில் முரட்டுக் குத்து போன்ற படங்களை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயக்குமார் தான் […]
கொரோனா இல்லாத எனது குடும்பத்தை அசிங்கப்படுத்தியதற்கு வாழ்த்துக்கள் என மாநகராட்சிக்கு பேனர் வைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதிலும் கொரானா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் அரசு மக்களை இந்த பெருந்தொற்றில் இருந்து பாதுகாப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், கோவையில் உள்ள ஹோப் காலேஜ் எனும் பகுதியை சேர்ந்த ஒருவர் கடந்த 25ஆம் தேதி கொரோனா காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது குடும்பத்தில் உள்ள ஐந்து பேருக்கு மாநகராட்சி […]
கோவையில் பெய்த கனமழையால் வீடு இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் பெய்த கனமழையால் வீடு இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செட்டி வீதியில் உள்ள வனஜா என்பவரது 2 அடுக்குமாடி வீடு கனமழையால் இடிந்து விழுந்ததை அடுத்து அருகிலுள்ள ஓட்டு வீடும் இடிந்து விழுந்தது. உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் சம்பவம் நடந்த […]
கோவையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் காரணத்தால் இன்று தொடங்கி வரும் 7 ஆம் தேதி வரை நகை கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலின் தாக்கத்தை பொறுத்து பல இடங்களில் ஊரடங்கில் தளர்வும், கட்டுபாட்டுகளும் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, கோவை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் அங்குள்ள நகை கடைகளையும், நகை பட்டறைகளையும் இன்று தொடங்கி வரும் 7ஆம் […]
காக்கைகளிடம் சிக்கிய ஆந்தையை காப்பாற்றி பத்தாம் வகுப்பு சிறுவன் வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார். கோவை மாவட்டத்தில் உள்ள மங்கலக்குறிச்சியில் பத்தாம் வகுப்பு படித்து வருபவர் ஹரிஹரபிரியன். இவர் வெளியில் சத்தம் கேட்டு சென்ற போது அங்கு காக்கைகள் கூட்டம் கூட்டமாக இணைந்து ஆந்தை ஒன்றினை துரத்துவதை கண்டுள்ளார். உடனடியாக அந்த மாணவன் துரத்தி கொண்டிருந்த காக்கைகளை விரட்டியுள்ளார். அதனையடுத்து மயக்க நிலையில் இருந்த ஆந்தைக்கு தண்ணீர் கொடுத்து காப்பாற்றியுள்ளார். அதனையடுத்து அந்த ஆந்தையை வனத்துறையினரிடம் ஒப்படைத்த சிறுவனின் […]
ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி கோவை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கேரளாவில் வருட வருடம் விமர்சையாக கொண்டாடப்படும் பாரம்பரிய திருவிழாக்களில் ஒன்று ஓணம். இந்த வரும் கொரோனா பாதிப்பு காரணமாக பல கட்டுபாட்டுகளை அரசாங்கம் விதித்துள்ளது. ஆம் வீடுகளில் மட்டும் ஓண விழாவை கொண்டாட வேண்டும் என்றும் , பொது இடங்களில் ஓணம் நிகழ்ச்சிகளை நடத்த கூடாதும் என்றும் கூறி கேரள அரசு தடை விதித்துள்ளது. […]
13 வயது சிறுவனை லத்தியால் அடித்த காவலர் பணியிடமாற்றம். நேற்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இந்நிலையில், கோவை ஓண்டிபுதூர் பகுதியில் நேற்று முழு ஊரடங்கின் போது சாலையில் சுற்றிய 13 வயது சிறுவனை காவலர் துர்காராஜ் லத்தியால் தாக்கி உள்ளார். இவர் லத்தியால் தாக்கியதில், அந்த சிறுவனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சிங்காநல்லூர் காவல்நிலைய காவலர் துர்காராஜ், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிடமாற்றம் செய்து, கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் உத்தரவு […]
கோவை அரசு மருத்துவமனையில் ரூ. 50லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட செயற்கை உடற்பாகங்கள் தயாரிப்பு நிலையத்தையும், 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிளாஸ்மா வங்கியையும் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் திறந்து வைத்தனர். கோவை அரசு மருத்துவமனையில் ரூ. 50லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட செயற்கை உடற்பாகங்கள் தயாரிப்பு நிலையத்தை அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் திறந்து வைத்தனர். இந்த தயாரிப்பு நிலையம் மூலம் விபத்தில் கைகளில், கால்கள் உள்ளிட்ட உடற்பாகங்களை இழந்தவர்களுக்கு செயற்கை உடற்பாகங்களை முதலமைச்சரின் காப்பீட்டு […]
கோவையில் உள்ள கல்யாண் ஜூவல்லரியில் பணிபுரியும் 51 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்த ஜூவல்லரியிலயன் மேலாளர்கள் கைது செய்யப்பட்டனர். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கோவையில் 100 அடி சாலையில் உள்ள கல்யாண் ஜூவல்லரியில் பணிபுரியும் ஒருவருக்கு கடந்த சனிக்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்த ஜூவல்லரி கிருமிநாசினி தெளிக்கப்பட்டு […]
கோவையில் உணவுக்காக வீடுகளை உடைத்து சாப்பிடும் யானையை பிடித்து வனப்பகுதியில் விட பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கோவை மாவட்டம் மருதமலை அடிவாரத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று உணவுக்காக அங்குமிங்கும் சுற்றி அமைந்துள்ளது. பகல் வேளையில் மக்கள் குடியிருக்க கூடிய பகுதிகளில் நுழைந்து அந்த யானை தனக்கு கிடைத்த உணவுகளை உண்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வனப்பகுதிக்கு மக்கள் அளித்த புகாரின் பேரில் அவர்கள் […]
கோவை உயிரியல் பூங்காவில் ஒரே நேரத்தில் 33 குட்டிகளை ஈன்ற கண்ணாடி விரியன் பாம்பு. ஆசியாவில் குறிப்பாக தென்கிழக்கு ஆசியா, சீனா, தைய்வான் ஆகிய பகுதிகளில் அதிகமாக காணப்படக்கூடிய மிக அதிக நச்சுத்தன்மை கொண்ட பாம்பு தான் கண்ணாடிவிரியன். இப்பாம்பு நான்கு வகைகளை கொண்டிருந்தாலும் இந்தியாவில் ஏறக்குறைய ஏற்படக்கூடிய அனைத்து பாம்பு விஷக்கடி உயிர் இழப்புகளுக்கும் இவைதான் காரணம். தடித்த உடலுடன் பெரிய முக்கோண வடிவ தலை கொண்ட இந்த பாம்பு பெரிய மூக்கு துவாரம் உடையதாகவும் […]
அடிக்கடி பலரை கொலை செய்து வந்த அரிசி ராஜா என்ற முரட்டு யானை எட்டு மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டு தற்பொழுது விடுவிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் வெள்ளலூர் அருகே 2017 ஆம் ஆண்டு ஜூன் இரண்டாம் தேதி அரிசி ராஜா எனும் காட்டு யானை 4 பேரை மிதித்து கொன்றது. இந்த சம்பவம் செய்தி ஊடகங்களிலும் பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் அங்கு விரைந்த வனத்துறையினர் அந்த யானைக்கு மயக்க ஊசி போட்டு அதனை பிடித்தனர். அதன்பின் அது வேறொரு […]
பெரியார் சிலைக்கு காவி சாயம் ஊற்றிய மர்ம நபர்கள். கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் காவி சாயத்தை ஊற்றி அவமதிப்பு செய்தததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த தி.க. மற்றும் திமுகவினர் அங்கு குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டத்தின் ஆட்சியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்லும் நிலையில், தமிழகத்திலும் இதன் தாக்கம் அதிகரித்து கொண்டே தான் உள்ளது. தமிழக முதல்வர் இதற்கான தடுப்பு நடவடிக்கையாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி, மும்முரமாக பணிகளில் ஈடுபட்டு கொண்டுதான் இருக்கிறார். இந்நிலையில், கொரோனா ஒழிப்பு பணிகளில் மக்களுக்காக தீவிர பணிகளில் ஈடுபட்டிருந்த கோவை மாவட்டத்தின் ஆட்சியர் கு.ராஜாமணிக்கு கொரோனா தொற்று உறுதி […]
தனிமைப்படுத்தப்பட்டவர்கள் குறித்து இந்த எண்ணிற்கு புகார் அளிக்கலாம். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை அடாவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா பரவலால், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் தங்கி இருப்பவர்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப இயலாமல் தவித்து வந்த நிலையில், தற்போது தான் மீண்டும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். இவ்வாறு, வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து […]
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜூனனுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் எம்எல்ஏ அம்மன் அர்ச்சுணனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.ஏற்கனவே இவருடைய மகள், மருமகன், பேத்திக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 10வது சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுண என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ய கோவை மாவட்டத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி சென்றுள்ளார்.இந்நிலையில் கோவையில் அமைச்சர் வேலுமணி, மாவட்ட ஆட்சியர் ராசாமணி ,காவல்துறை ஆணையாளர் சுமித் சரண் என பல்வேறு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு […]
கோவை மாவட்டத்தில் வாக்கிங் செல்வதற்க்கும், உடற்பயிற்சிகள் மேற்கொள்வதற்கும் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாம். கொரோனா வைரஸ் தாக்கம் கோவை மாவட்டத்திலும் அதிகம் பரவி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று இந்தியா முழுவதும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த பல மாதங்களாகவே நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், முகக்கவசம் அணிய வேண்டும் தேவையில்லாமல் வெளியில் நடமாட கூடாது என்ற சில முறைகளும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது கோவை மாவட்டம் பந்தய சாலையில் தினமும் […]
கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் மாணவி ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் இன்னும் தனது வீரியத்தை குறைக்காமல் கோர முகத்தை உலகெங்கும் காண்பித்து வரும் நிலையில், 70 லட்சத்துக்கும் அதிகமானோர் உலகம் முழுவதும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலும் இந்த கொரோனா தனது வீரியத்தை காட்டிக் கொண்டுதான் உள்ளது. இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் பணி புரியக்கூடிய 19 வயது நர்சிங் மாணவி ஒருவருக்கு கொரோனா […]
கோவை மாவட்டத்தில் வீட்டின் சமயலறையில் பதுங்கியிருந்த 7 அடி பாம்பை வனப்பகுதியின் பிடித்து சென்றுள்ளனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலுள்ள ஆலங்கோப்பு எனும் பகுதியை சேர்ந்தவர் தான் சங்கர். அவரது வீட்டின் சமயலறையில் 7 அடி நீளமுள்ள நாக பாம்பு மளிகை பொருள்கள் வைக்குமிடத்தில் பதுங்கியிருந்துள்ளது. இதனை பார்த்த குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்பு தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் அங்கு விரைந்து வந்து, இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின்பு பாம்பை மீது கொண்டு சென்றுள்ளனர்.