மேகாலயா : ராஜா ரகுவன்ஷி கொலையில் மீண்டும் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது, கொலை செய்த குற்றவாளிகளில் ஒருவரான ராஜ் குஷ்வாஹா, ராஜா ரகுவன்ஷியின் இறுதிச் சடங்கிற்கு வருகை தந்து மக்களை அழைத்துச் செல்லும் வாகனத்தை ஓட்டிச் சென்றதாக நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தூரைச் சேர்ந்த ராஜா ராகுவன்ஷி மற்றும் சோனம் ராகுவன்ஷி தம்பதிக்கு கடந்த மே 11ம் தேதி பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெறுகிறது. இருவரும் தேன் நிலவிற்காக மே […]
லாஸ் ஏஞ்சல்ஸ் : அதிபர் டொனால்ட் டிரம்ப், 2025-ஆம் ஆண்டு தனது இரண்டாவது பதவிக் காலத்தில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிப்பவர்களை விரைவாக நாடு கடத்துவதற்கு, குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு (ICE) அதிகாரிகளுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டது. அந்த உத்தரவின்படி, லாஸ் ஏஞ்சல்ஸில் ICE அதிகாரிகள் பெரிய அளவிலான சோதனைகளை நடத்தினர். இதில், வீடுகள், பணியிடங்கள் மற்றும் பொது இடங்களில் புலம்பெயர்ந்தோரை கைது செய்து, ஆவணங்கள் இல்லாதவர்களை உடனடியாக நாடு கடத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த […]
சென்னை : தமிழ்நாடு காவல் துறையில் காலியாக உள்ள காவல் உதவி ஆய்வாளர் (SI), தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்த 1,299 காலிப் பணியிடங்களுக்கு சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், வரும் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுகளின்படி தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் SI தேர்வை ஒத்திவைப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, மதிப்பெண் அடிப்படையில் […]
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இன்று மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்றைய தினம் ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. மற்ற இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான […]
டெல்லி : ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்- 4 திட்டத்தின் கீழ், இந்தியா, அமெரிக்கா, போலந்து மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) அனுப்ப உள்ளது. இந்த பணி அமெரிக்காவின் விண்வெளி பயண நிறுவனமான ஆக்ஸியம் ஸ்பேஸ் மற்றும் நாசாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படுகிறது. இது தவிர, எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமும் இந்த பணியில் முக்கிய பங்கு வகிக்கும். இருப்பினும், இந்திய விண்வெளி வீரர் குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லாவை […]
மேற்கு வங்காளம் : OpenAI இன் ChatGPT நடைமுறைக்கு வந்ததிலிருந்தே தலைப்பு செய்திகளில் இடம்பெற்று வருகிறது. இப்போது ChatGPT இன் புதிய மாடல், நாட்டின் கடினமான தேர்வில் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றதன் மூலம் விவாதத்தைத் தூண்டியுள்ளது. உலகளவில் கடினமாக கருதப்படும் JEE ADVANCED தேர்வெழுதிய CHAT GPT 03. 360-க்கு 327 மதிப்பெண்கள் பெற்று, தேர்வில் அகில இந்திய அளவில் 4வது இடத்தைப் பிடித்தது. ஆம், இந்த மதிப்பெண், JEE Advanced தேர்வில் All India Rank […]
சென்னை : சென்னையின் திடீரென பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. காலை முதல் வெப்பம் கொளுத்திய நிலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து கனமழை கொட்டத் தொடங்கியது. அதன்படி, திருவொற்றியூர், பெரம்பூர், வியாசர்பாடி, திருவிக நகர், பாரிமுனை, எழும்பூர், நுங்கம்பாக்கம், முகப்பேர், வில்லிவாக்கம், கொரட்டூர், ஆழ்வார்பேட்டை, ராயப்பேட்டை, வடபழநி, வளசரவாக்கத்தில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. திடீரென பலத்த காற்றுடன் பெய்த மழையால், நுங்கம்பாக்கம் ஸ்பெல்லிங் ரோடு […]
சென்னை : சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளில் சென்று கொண்டிருக்கும் வேலையில் பாமக உட்கட்சி விவகாரம் என்பது எப்போது முடிவுக்கு வரும் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கப்போகிறது என்று தொண்டர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள். ஆம், அன்புமணி – ராமதாஸ் இருவருக்கும் இடையே எழுந்த பிரச்சனை இன்னும் முடிவுக்கு வராத நிலையில், இருவரையும் சமரசம் செய்ய முக்கிய நபர்கள் முயன்றதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், பாஜகவுடன் கூட்டணி வேண்டவே வேண்டாம் என […]
தூத்துக்குடி : மதுரை எலியார்பட்டி மற்றும் தூத்துக்குடி புதூர் பாண்டியபுரம் ஆகிய இரண்டு சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிக்க ஜூன் 3ம் தேதி இடைக்கால தடைவிதிக்கப்பட்டது. அதாவது, சாலை அமைப்பது உள்ளிட்ட வசதிகளை செய்யும் வரை சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிக்க கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வு உத்தரவிட்டது. ஆனால், இந்த இரண்டு சுங்க சாவடிகளிலும் கட்டணம் வசூலிக்க விதிக்கப்பட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை எதிர்த்து அடுத்த இரு தினங்களிலேயே உச்ச […]
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் நடத்திய “மறக்குமா நெஞ்சம்” என்கிற தலைப்பில் இசை நிகழ்ச்சி ஒன்றை 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி சென்னை ஈசிஆரில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய தினம், நிகழ்ச்சி மழையால் ரத்து செய்யப்பட்டது. பின்னர், செப்.10ம் தேதி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஆகஸ்ட் மாதம் பெற்ற டிக்கெட்டுடன் வரலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த அர்ஜுன், இந்த நிகழ்ச்சிக்கு வாகன நிறுத்த வசதியுடன் சேர்த்து ரூ.10,000 மதிப்புள்ள டிக்கெட்டை […]
மேகாலயா : இந்தூரைச் சேர்ந்த ராஜா ராகுவன்ஷி மற்றும் சோனம் ராகுவன்ஷி என்ற தம்பதியினர் கடந்த மே 11ம் தேதி அன்று திருமணம் செய்து கொண்டனர். திருமணமான 9 நாட்களுக்குப் பிறகு, மே 20 அன்று ஹனிமூனுக்காக வடகிழக்கு மாநிலமான மேகாலயாவிற்கு பயணம் மேற்கொண்டனர். மே 22 அன்று அவர்கள் ஷில்லாங் நகரை அடைந்தனர். பின்னர், வாடகைக்குக் சைக்கில் எடுத்து கொண்டு வெளியே சுற்றி பார்க்க சென்றனர். ஆனால், மே 23 ஆம் தேதிக்குப் பிறகு இருவரும் […]
கோழிக்கோடு : கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள பேப்பூர் கடற்கரையில் ஒரு சரக்குக் கப்பல் தீப்பிடித்தது. இந்தக் கப்பல் சிங்கப்பூர் கொடியுடன் கூடிய 270 மீட்டர் நீளமுள்ள கொள்கலன் கப்பலாகும். கொழும்புவில் இருந்து மும்பைக்குச் சென்ற சிங்கப்பூரைச் சேர்ந்த சரக்கு கப்பல் கோழிக்கோடு அருகே நடுக்கடலில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காலை 10:30 மணியளவில் கப்பலின் தளத்தில் வெடிப்பு நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த ஜூன் 7 ஆம் தேதி கொழும்பிலிருந்து புறப்பட்ட இந்த கப்பல் ஜூன் 10 […]
சென்னை : தவெகவில் இன்று புதிதாக இணைந்த முன்னாள் IRS அதிகாரி அருண்ராஜ்-க்கு கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கி அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். மேலும், திமுக முன்னாள் MLA டேவிட் செல்வன், அதிமுக முன்னாள் MLA ராஜலட்சுமி, ஸ்ரீதரன் ஆகியோர் த.வெ.கவில் இணைந்தனர். இது தவிர ஓய்வு பெற்ற நீதிபதி சுபாஷ், ஜேப்பியார் ரெமிபாய் கல்வி அறக்கட்டளைத் தலைவர் மரிய வில்சன் ஆகியோரும் இணைந்தனர். இவர்கள் கட்சியில் இணைந்தது குறித்து அக்கட்சியின் தவெக தலைவர் […]
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார். அதன்படி, இன்று (09-06-2025) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதே சமயம் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, […]
சென்னை : தாம்பரம் பகுதியில் உள்ள அரசு விடுதியில் தங்கி 8-ஆம் வகுப்பு படித்து வரும் 13-வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் இரண்டு கால்களும் உடைக்கப்பட்டு உடல்களில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், இந்த சம்பவத்தில் முதற்கட்டமாக விடுதியில் காவலாளியாக பணியாற்றி வந்த மேத்யூ கைது செய்யப்பட்டு அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து, அரசு சேவை இல்லங்களில் பெண் காவலாளிகளை நியமிக்க […]
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில் கட்சிகள் அனைத்தும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுக்கொண்டு அதற்கான வேலைகளை தொடங்கியிருக்கிறது. இப்படியான சூழலில் பாமக உட்கட்சி விவகாரம் என்பது எப்போது முடிவுக்கு வரும் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கப்போகிறது என்று தொண்டர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள். ஏனென்றால், அன்புமணி – ராமதாஸ் இருவருக்கும் இடையே எழுந்த பிரச்சினை என்பது இன்னும் முடிவுக்கு வராத ஒரு விஷயமாக இருந்து வருகிறது. இருவரும் சமீபத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினாலும் […]
மும்பை: இன்று காலை (ஜூன் 9, 2025) புறநகர் ரயில் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர விபத்தில், ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து குறைந்தது 5 பயணிகள் உயிரிழந்தனர். மும்பையின் தானே மாவட்டத்தில் உள்ள மும்ப்ரா மற்றும் சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையம் (CSMT) இடையே பயணித்த வேகமான புறநகர் ரயிலில் இந்த விபத்து நிகழ்ந்தது. கூட்ட நெரிசல் காரணமாக ரயிலின் கதவு அருகே நின்ற பயணிகள் தவறி தண்டவாளத்தில் விழுந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் […]
சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா, 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கியே தங்கள் அரசியல் நகர்வுகள் இருக்கும் எனவும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2026இல் மாநிலங்களவை ராஜ்ய சபாசீட் தேமுதிகவுக்கு உறுதியாக வழங்கப்படும் என்று உறுதியளித்த தகவலை பற்றியும் கூறியுள்ளார். ஆனால், முன்னர் 2025இல் சீட் வழங்கப்படும் எனக் கூறப்பட்டது இப்போது 2026ஆக மாற்றப்பட்டுள்ளதாக பிரேமலதா தெரிவித்தார். இது தொடர்பாக பேசிய அவர் ” […]
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்புக்கு முழு ஆதரவு அளித்த தொழிலதிபர் எலான் மஸ்க், ட்ரம்ப் மீண்டும் அதிபரான பிறகு அரசு செலவுகளைக் குறைக்க உருவாக்கப்பட்ட துறையை மேற்பார்வையிட்டார். ஆனால், சமீபத்தில் தயாரான அமெரிக்க அரசின் பட்ஜெட்டில் மஸ்க்கின் குழு பரிந்துரைத்த எந்தவொரு மாற்றமும் ஏற்கப்படவில்லை. வரிச் சலுகைகள், ராணுவ செலவுகளுக்கு கூடுதல் நிதி, மின்சார வாகன மானியம் ரத்து போன்றவை மஸ்க்கை அதிருப்தி அடையச் செய்தன. இதனால், ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகுவதாக […]
சென்னை : நேற்று மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு திமுகவை விமர்சித்து பேசினார். இது குறித்து பேசிய அவர் “” மு.க.ஸ்டாலின் அமித்ஷாவால் திமுகவை தோற்கடிக்க முடியாது என கூறியுள்ளார். சரி நான் அவருக்கு இந்த நேரத்தில் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் என்னவென்றால், என்னால் உங்களை தோற்கடிக்க முடியாது. ஆனால் தமிழ்நாட்டு மக்கள் உங்களை (திமுகவை) தோற்கடிக்க தயாராக உள்ளனர். இவ்வளவு காலம் அரசியலில் மக்களின் நாடித்துடிப்பை […]